போதையில் இளைஞர்; ரயிலால் கால்கள் துண்டானதை அறியாமல் இருக்கும் சோகம்..! வைரலாகும் வீடியோ

பஞ்சாப் மாநிலத்தில், ரயிலால் கால்கள் துண்டிக்கப்பட்டதை உணராமல்,  போதைப்பொருள் பயன்படுத்தியுள்ள இளைஞர் ஒருவர் அமர்ந்திருக்கும் வீடியோ, ஃபேஸ்புக்கில் வைரலாகிவருகிறது. 

போதைப்பொருள்

பஞ்சாப் மாநிலத்தில், கஞ்சா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. 70 சதவிகிதம் பேர் போதை மருந்துக்கு அடிமையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது போதை மருந்துச் சோதனை மேற்கொள்ளப்படும் என்று அம்மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் அறிவித்திருந்தார். அந்த அளவுக்கு, பஞ்சாப்பில் போதை மருந்துப் பழக்கம் அம்மாநிலத்தவரிடையே பரவியுள்ளது. இந்த நிலையில், பஞ்சாப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், போதையில் ரயில்வே ட்ராக்கில் உட்கார்ந்துள்ளார்.

அந்த வழியாக வந்த ரயில், அவரது காலை துண்டித்துச் சென்றது. ஆனால் அந்த இளைஞர், கால் துண்டானதை உணராமல் சாதரணமாக அமர்ந்திருக்கிறார். ஃபேஸ்புக்கில் வைரலாகும் அந்த வீடியோவில், 'இளைஞர் மிகுந்த போதையில் அமர்ந்திருக்கிறார். அவரைச் சுற்றி நடக்கும் விஷயங்களை அவர் உணரும் நிலையில் இல்லை. துண்டிக்கப்பட்ட கால்களிலிருந்து ரத்தம் வழிகிறது. சுற்றி இருப்பவர்கள், அவரது பெயர், முகவரியை விசாரிக்கின்றனர்.  பதில் சொல்லும் நிலையில் அவர் இல்லை'. இந்த வீடியோ, தற்போது ஃபேஸ்புக்கில் வைரலாகிவருகிறது.

 


Do you like the story?

Please Appreciate the Author by clapping!