ரிலையன்ஸ் குழுமத் தலைவராக மீண்டும் முகேஷ் அம்பானி! - பொதுக்குழு கூட்டத்தில் முடிவு

ரிலையன்ஸ் குழுமத் தலைவராக முகேஷ் அம்பானி மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முகேஷ் அம்பானி

இந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி சமீபத்தில் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 33-வது இடத்திலிருந்து 19-வது இடத்திற்கு முன்னேறி அசத்தினார். இவரது தலைமையின் கீழ் ரிலையன்ஸ் குழுமம் செயல்பட்டுவருகிறது. இவரது தற்போதைய பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரலுடன் நிறைவடைகிறது. இதையடுத்து மும்பையில் ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முகேஷ் அம்பானியை மேலும் 5 ஆண்டுகளுக்கு தலைவராக தேர்வு செய்யும் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. முதலீட்டாளர்கள் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. அதன்படி,  வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 98.5 சதவிகித வாக்குகளும் எதிராக 1.48 சதவிகி வாக்குகளும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அவருக்கு ஆண்டுக்கு 4.17 கோடி ரூபாய் சம்பளம் மற்றும் சுமார் 59 லட்சம் ரூபாய் அளவிலான இதரப் படிகளும் வழங்கப்படவுள்ளது.

முன்னதாக 1977 முதல் ரிலையன்ஸ் இயக்குநர் குழுவில் இடம்பிடித்திருந்த முகேஷ் அம்பானி, அவரது தந்தையும், ரிலையன்ஸ் நிறுவனருமான திருபாய் அம்பானி இறந்தப் பின் 2002-ஆம் ஆண்டு ரிலையன்ஸ் குழுமத் தலைவரானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!