உன்னாவ் சிறுமியின் தந்தை கொலை வழக்கு - 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

உத்தரபிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமியின் தந்தை கொல்லப்பட்ட விவகாரத்தில் பாஜக எம்.எல்.ஏவின் சகோதரர் உள்பட 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

உன்னாவ்

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் என்ற பகுதியில், 17 வயது சிறுமி, ”பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் மற்றும் அவருடன் சேர்ந்தவர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கடந்த வருடம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகார் அளித்து ஒரு வருடமாகியும் குற்றவாளிகள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், சமீபத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தயநாத் வீட்டின் முன் அந்த சிறுமி தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமியின் தந்தை, மர்மமான முறையில் உயிரிழந்தார். அதன்பின், இந்தப் பிரச்னை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பேசப்பட்டது.

உன்னாவ் சிறுமிக்கு ஆதரவாகவும், பா.ஜ.க எம்.எல்.ஏ-வை கைதுசெய்யக் கோரியும், பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. பின்னர், இந்த வழக்கை அலகாபாத் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, குல்தீப் சிங் கைதுசெய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. தற்போது உன்னாவ் சிறுமியின் தந்தை கொல்லப்பட்ட வழக்கை விசாரித்துவரும் மத்திய புலனாய்வு  நேற்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில் குல்தீப் சிங் சகோதரர், அதுல் சிங் பெயர் உள்பட ஐந்து பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ள. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!