வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/07/2018)

கடைசி தொடர்பு:11:51 (09/07/2018)

இந்தியப் பொருளாதாரம் பின்னோக்கிச் செல்கிறது! அமர்த்தியா சென் வருத்தம்

இந்தியப் பொருளாதாரம் 2014-ம் ஆண்டுக்குப் பிறகு தவறான பாதையில் பயணித்து வருவதாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார். 

அமர்த்தியா சென்

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமர்த்தியா சென், 'தென் கிழக்கு நாடுகளில் பாகிஸ்தானுக்குப் பிறகு நாம் தான் மிக மோசமான பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டுள்ளோம். நாட்டில், சமத்துவமின்மை, சாதி பாகுபாடு, பழங்குடியினர்களின் கோரிக்கைகள் ஆகியவற்றில் கடந்த 4 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாதாளச் சாக்கடைகளைச் சுத்தம் செய்பவர்கள், கையால் மலம் அள்ளுபவர்களின் கோரிக்கைகள்கூட மறுக்கப்படுகின்றன. சுதந்திரத்தின்போது, மதத்தைவைத்து வெற்றி பெற்றுவிட முடியாத நிலை இருந்தது. ஆனால், தற்போது அது நடந்துவிட்டது. அதனால்தான் எதிர்கட்சிகள் அனைத்தும் ஓர் அணியில் இணைந்து நிற்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. இது மோடிக்கும் ராகுல் காந்திக்கும் நடக்கும் போட்டியல்ல. இது இந்தியா என்றால்  என்ன என்பதற்கான போட்டி' என்று தெரிவித்தார்.