`இந்துத்துவா மட்டுமே பா.ஜ.க-வுக்கு உதவும்' - சுப்ரமணியன் சுவாமி ஓபன் டாக்!

இந்துத்துவா மட்டுமே பா.ஜ.க-வுக்குக் கைகொடுக்கும் என அக்கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இந்துத்துவா

மும்பையில் விராத் இந்துஸ்தான் சார்பில் நடைபெற்ற `இந்தியாவின் மிகப்பெரிய கதை' என்ற நிகழ்ச்சியில் சுப்ரமணியன் சுவாமி  கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், `பொருளாதார வளர்ச்சி வாக்குகளைக் கொண்டுவரப்போவதில்லை. இந்தியா ஒளிர்கிறது என்ற பெயரில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மேற்கொண்ட பிரசாரம் தோல்வியில் முடிவடைந்தது.  இந்துத்துவா மற்றும் ஊழலற்ற ஆட்சி என்ற இரண்டு வாக்குறுதிகள் அளித்து கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றது. இந்துத்துவா மட்டுமே பா.ஜ.க-வுக்கு உதவும். மேலும், தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியை பா.ஜ.க தொடங்கியுள்ளது. அதை நிறைவேற்ற இன்னும் 5 ஆண்டு தேவைப்படும். அதற்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும்' என்றார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை சாடிய அவர், `காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரின் மனைவி மற்றும் மகனை திகார் சிறைக்கு அனுப்புவேன். காங்கிரஸ் கட்சியின் அடுத்த செயற்குழு கூட்டம் திகார் சிறையில்தான் நடைபெறும்' என்று தெரிவித்தார். மேலும்`நாட்டின் பொருளாதாரம் தற்போது நல்ல நிலையில் இல்லை. அது குறித்துப் பேச நான் நிதி அமைச்சர் அல்ல. மக்கள் மீதான பல்வேறு வரிகளை நீக்க வேண்டும்' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!