பி.ஜே.தாமஸ்.. அரசுக்கு பெரும் பின்னடைவு: பிஜேபி

புதுடெல்லி, மார்ச் 3,2011

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பொறுப்பில் பி.ஜே. தாமஸை நியமனம் செய்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக பிஜேபி கருத்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிருபர்களிடம் பிஜேபியின் ராஜீவ் பிரதாப் ரூடி கூறுகையில், "இது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் அரசுக்கு பெரும் பின்னடைவு," என்றார்.

"மத்திய அரசின் நியமனம் செல்லாது என இன்று வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பும், பிஜேபியின் நிலைப்பாடும் ஒன்றுதான். தாமஸ் நியமனத்தை பிஜேபி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கடுமையாக எதிர்த்தார்.

எல்லா ஊழல்களிலும் மத்திய அரசு பங்கு வகித்துள்ளது என்பது தெளிவு," என்றார் அவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!