வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (10/07/2018)

கடைசி தொடர்பு:04:29 (10/07/2018)

பாலியல் தொந்தரவு விவகாரம்..! பெண் நீதிபதியை நியமிக்க நடிகை கோரிக்கை

பாலியல் துன்புறுத்தல் வழக்கை விசாரிக்க பெண் நீதிபதியை நியமிக்க வேண்டும் என பாதிப்புக்குள்ளான கேரள நடிகை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பாலியல் துன்புறுத்தல் வழக்கை விசாரிக்க பெண் நீதிபதியை நியமிக்க வேண்டும் என பாதிப்புக்குள்ளான கேரள நடிகை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கேரள ஐகோர்ட்

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகையைக் காரில் கடத்திச்சென்று பாலியல் துன்புறுத்தல் கொடுத்தச் சம்பவத்தில் நடிகர் திலீப் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். திலீப் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டதும், இப்போது மீண்டும் சேர்க்கப்பட்டு சர்ச்சைக்குப் பிறகு மீண்டும் நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பாலியல் துன்புறுத்தல் வழக்கை விசாரிக்க பெண் நீதிபதியை நியமிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நடிகை எர்ணாகுளம் பிரின்சிபல் செசன்ஸ் கோர்ட்டில் ஏற்கனவே மனுத்தாக்கல்  செய்திருந்தார். கோர்ட் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து பாலியல் துன்புறுத்தல் வழக்கை விசாரிக்க பெண் நீதிபதியை நியமிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நடிகை கேரள ஐகோர்ட்டில் இன்று மனுத்தாக்கல் செய்தார். பாலியல் சம்பந்தமான விவகாரம் என்பதால் பெண் நீதிபதி வேண்டும் என நடிகை சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.