``மரணம் இதற்குத் தீர்வல்ல" - நிர்பயா வழக்கு குறித்து அம்னெஸ்டி! | Death penalty is Not the Solution Says AMNESTY

வெளியிடப்பட்ட நேரம்: 02:50 (10/07/2018)

கடைசி தொடர்பு:07:55 (10/07/2018)

``மரணம் இதற்குத் தீர்வல்ல" - நிர்பயா வழக்கு குறித்து அம்னெஸ்டி!

``மரண தண்டனைகள் ஒருபோதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்குத் தீர்வாக அமைந்ததில்லை" என்று நிர்பயா வழக்குக் குறித்து கருத்து தெரிவித்துள்ளது, சர்வதேச மனித உரிமை நிறுவனமான அம்னெஸ்டி (AMNESTY).

``மரண தண்டனைகள் ஒருபோதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்குத் தீர்வாக அமைந்ததில்லை" என்று நிர்பயா வழக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ளது, சர்வதேச மனித உரிமை நிறுவனமான அம்னெஸ்டி (AMNESTY). 

நிர்பயா. இந்தப் பெயரை இன்னும் இந்தியா மறந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம், டெல்லியில் ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட குமபலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார் மருத்துவ மாணவி நிர்பயா. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், சிகிச்சைப் பலனின்றி இறந்து போனார். இந்தச் சம்பவம் இந்தியா முழுக்கவே பெரும் உணர்ச்சி அலைகளை எழுப்பியது. 

நிர்பயா - வழக்கு

இந்த வழக்கில் ராம்சிங், அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் மற்றும் ஒரு 17 வயது சிறுவன் ஆகிய 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். 

17 வயது சிறுவன் என்பதால், அந்த இளம் குற்றவாளி சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டான். 3 ஆண்டு தண்டனை முடித்து விடுதலையும் அடைந்துவிட்டான். முக்கியக் குற்றவாளியான ராம்சிங், கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டான். 

இந்த வழக்கின் மற்ற  குற்றவாளிகளான பவன் குப்தா, முகேஷ் மற்றும் வினய் சர்மா ஆகிய மூவரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில், அக்‌ஷய்குமார் சிங் மட்டும் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்யவில்லை. இந்த மூவரின் மனுவை 09-07-2018 அன்று விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த மூவரின் மனுக்களையும் நிராகரித்து மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. 

நிர்பயா வழக்கு - உச்சநீதிமன்றம்

இந்தத் தீர்ப்பு குறித்து,

``மரண தண்டனைகளை வழங்குவதன் மூலம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் கிடையாது. இது போன்ற பெருங்குற்றங்கள் நடக்கும்போது, மரண தண்டனை என்பதையே தீர்ப்பாகக் கொடுத்து சட்டம்- ஒழுங்கு காப்பாற்றப்பட்டதாகக் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், தெளிவான விசாரணைகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உதவிகள் போன்றவைகள் சரியாக செய்யப்படுவதில்லை. இதுபோன்ற பிரச்னைகளுக்கு மரண தண்டனைகள் தீர்வல்ல. ஒட்டுமொத்த சமூக மாற்றம், முன்னேற்றம் குறித்து சிந்திக்க வேண்டிய தருணம் இது" என்று கருத்து தெரிவித்திருக்கிறது சர்வதேச மனித உரிமை நிறுவனமான அம்னெஸ்டி. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க