மனைவியுடன் சண்டை; குடிபோதையில் 3 வயது மகனை ஆட்டோ மீது வீசிய தந்தை - அதிர்ச்சி வீடியோ!

குடிபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தன் 3 வயது மகனை அருகில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது கொடூரமாக தூக்கி வீசி அடித்திருக்கிறார் தந்தை. அந்த நபர் குழந்தையை அடிக்கும் வீடியோ காட்சி தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது.

குழந்தை

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் வசித்து வருபவர் சிவ கௌட். இவர், கடந்த 8-ம் தேதி இரவில் குடித்துவிட்டு தன் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதையடுத்து, அருகில் இருந்த தன் 3 வயது மகனை தலைகீழாகப் பிடித்து, தன் மனைவியுடன் சண்டை போட்டவாறே ஆட்டோ மீது கொடூரமாக வீசி அடித்துள்ளார் சிவ கௌட். அவர்கள் சண்டையிடும் வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி கண்டனங்களை குவித்து வருகிறது. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சிவ கௌட்டின் மனைவி அவர் மீது புகார் அளிக்க மறுத்துவிட்டார். அதனால், போலீஸார் தாமாக முன்வந்து, சிறுவர் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. குற்றவாளி தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது'' என்றார்.

 

(VC - ANI)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!