வெளியிடப்பட்ட நேரம்: 10:54 (10/07/2018)

கடைசி தொடர்பு:10:54 (10/07/2018)

குடியரசுத் தலைவர் மாளிகையில் தென் கொரிய அதிபருக்கு வரவேற்பு -ராம்நாத் கோவிந்த், மோடி பங்கேற்பு

அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் மற்றும் அவரின் மனைவியை குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர்

மோடி

(Photo Credit - ANI)

இந்தியாவுக்கு முதல் முறையாகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன். அவருடன், அவரின் மனைவி கிம் ஜுங் சூக் மற்றும் அந்நாட்டு முக்கிய அதிகாரிகள் வந்துள்ளனர். கடந்த 8-ம் தேதி மாலை டெல்லி வந்த அவர்களை மத்திய உள்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் வரவேற்றார். இங்கு, பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அவர், நேற்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நேரில் சந்தித்துப் பேசினார். அதன்பிறகு, உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய மொபைல் போன் தொழிற்சாலையை பிரதமர் மோடியுடன் இணைந்து திறந்து வைத்தார்.

மோடி

(Photo Credit - ANI)

இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை தென் கொரிய அதிபருக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரின் மனைவி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கூட்டாக இணைந்து அதிபர் மூன் ஜே இன் மற்றும் அவரின் மனைவியை வரவேற்றனர்.