பஞ்சாபில் விவசாயிகள் திரளும் கூட்டத்தில் மோடி இன்று உரை!

பஞ்சாப் மாநில விவசாய அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றுகிறார்.

மோடி

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த வாரம் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலையை நிர்ணயித்து உயர்த்தி உத்தரவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இதற்கு பிரதமரை பாராட்டும் வகையில் பஞ்சாப் மாநில விவசாயிகள் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், பாராட்டும் வகையிலும் அம்மாநிலத்தில் உள்ள முக்ஸ்தார் மாவட்டத்தில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ள பிரதமர் மோடியின் வருகையையொட்டி அம்மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் வருகையையொட்டி அப்பகுதியில் குண்டும் குழியுமாக இருந்த சாலைகள் சீரமைக்கப்பட்டு புதிய தார்ச்சாலைகள் போடப்பட்டுள்ளன. பிரதமரின் பாதுகாப்புக் காரணங்களுக்காக விவசாய மண்டிகள், காய்கறிக் கடைகள் இரண்டு நாள்கள் மூடப்பட்டுள்ளன. சாலையோர வியாபாரமும் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்தப் பொதுக்கூட்டத்தில் ஏறக்குறைய ஒரு லட்சம் விவசாயிகள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!