2 வருடங்கள்... 41 லட்சம் அடிமைகள்... மாடர்ன் அடிமைகளில் இந்தியாவின் நிலை என்ன? #VikatanInfographics

என் குடும்பம் எப்போதும் பயத்தோடு வாழ்கிறது. வன்கொடுமை என்மீதும், என் குடும்பத்தின் மீதும் திணிக்கப்படுகிறது'' உலக அடிமைத்தனம் குறித்த அறிக்கையில் ஓர் அடிமையின் வார்த்தையாக இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

2 வருடங்கள்... 41 லட்சம் அடிமைகள்... மாடர்ன் அடிமைகளில் இந்தியாவின் நிலை என்ன? #VikatanInfographics

யாரையாவது பார்த்து `நீங்கள் என்ன அடிமையா?' என்றால் அவருக்கு என்ன கோபம் வரும். ஆனால், இந்தியாவில் 1.8 கோடி பேர் எந்த ஒரு சிறு கேள்வியும் கேட்காமல் அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் தகவலை `உலக அடிமைத்தன அறிக்கை' தெரிவித்துள்ளது. 

``யாரும் அந்த வலிமிகுந்த வாழ்க்கையை விரும்புவதில்லை. என் மீது கொடூரமான வன்முறைகள் திணிக்கப்படுகின்றன. நான் என் சிறு தவறுகளுக்காகக் கடுமையாகத் தாக்கப்படுகிறேன். என் குடும்பம் எப்போதும் பயத்தோடு வாழ்கிறது. வன்கொடுமை என்மீதும், என் குடும்பத்தின் மீதும் திணிக்கப்படுகிறது'' உலக அடிமைத்தனம் குறித்த அறிக்கையில் ஓர் அடிமையின் வார்த்தையாக இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

கொத்தடிமைகள், கட்டாயப்படுத்தி பிச்சை எடுக்க வைக்கப்படுபவர்கள், வீட்டு வேலைகளுக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள், பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுபவர்கள், கட்டாயமாகத் திருமணம் செய்து அனுப்பப்படுபவர்கள் ஆகியோரை ``நவீனகால அடிமைகள்'' என்று வகைப்படுத்துகின்றனர். இந்தியாவில் மட்டும் 2016 கணக்கெடுப்பின்படி 1.83 கோடி பேர் மாடர்ன் அடிமைகளாக இருக்கிறார்கள். இது கிட்டத்தட்ட நெதர்லாந்தின் மக்கள் தொகைக்குச் சமமானது. 2014ம் ஆண்டிலிருந்து 2016ம் ஆண்டுக்குள் புதிதாக 41 லட்சம் பேர் அடிமைகளாக்கப்பட்டுள்ளனர். 

இந்த இரண்டு வருடங்களில் மட்டும் ஒரு நாளைக்கு 5616 பேர் புதிதாக அடிமைகளாக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 100ல் 51 பேர் இன்னோருவருக்குத் தொழில் ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ அடிபணிந்து போகும் நிலை உள்ளதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியா அடிமைகளை அதிகம் கொண்ட நாடுகளில் 5வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் வட கொரியாவும், அதைத் தொடர்ந்து உஸ்பெகிஸ்தான், கம்போடியா, கத்தார் ஆகிய நாடுகள் உள்ளன.

இங்கு `நவீனகால அடிமைகள்' என்பவர்களை எப்படி வகைப்படுத்துகிறார்கள் என்றால் `ஒரு மனிதர் இன்னோரு மனிதனின் சுதந்திரம், உடல், மனம், முடிவெடுக்கும் திறன், அவர்களை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது போன்ற நடவடிக்கைகளை செய்யும் நபருக்கு மற்றொரு நபர் அடிமையாக உள்ளார்' என்று வகைப்படுத்துகிறார்கள். 

அடிமைகள்

அடிமைத்தனத்துக்காக ஆள்கடத்தலுக்கு உள்ளானவர்களில் 46 சதவிகிதம் பேர் ஆசியாவைச் சேர்ந்தவர்கள். இதில் 83 சதவிகிதம் ஆண்கள், 17 சதவிகிதம் பெண்கள். கட்டாயத் திருமணங்கள் இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் நேபாளில் அதிகம். பொருளாதாரச் சூழல்களும், வன்கொடுமைகளும் பாலியல் அடிமைகள் இந்தியாவில் அதிகரிப்பதற்குக் காரணமாக உள்ளன. 

கொத்தடிமைகள்: இந்த அணுகுமுறை என்பது பல ஆண்டுகளாக உலக அளவில் உள்ள ஒரு விஷயம். ஒரு குடும்பத்தை எல்லா வகையிலும் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் பிரிவாக இது வகைப்படுத்தப்படுகிறது. இந்தியாவில் 3 லட்சம் பேர் கொத்தடிமைகளாக வெவ்வேறு மாநிலங்களில் உள்ளனர். 

இந்தியாவில் வீட்டு வேலைகள் செய்பவர்களாக 42 லட்சம் பேர் அடிமைகளாக்கி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது அந்த வீட்டைச் சேர்ந்தவர்களால் பாலியல் தொந்தரவு ஏற்படுவதும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் வீடுகளற்ற குழந்தைகளில் 16 சதவிகிதம் பேர் கட்டாயமாகப் பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதில் உடலுறுப்பு திருட்டுக்கும் இவர்கள் அடிமைகளாக விற்கப்படுகிறார்கள். இந்தியாவில் உள்ள வீடுகளற்ற குழந்தைகளில் 12 லட்சம் பேர் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள். கடந்த 6 வருடங்களில் மட்டும் ஆள்கடத்தல் 92 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 

சுதந்திரத்துக்கு முன் `நாடு அடிமைப்பட்டுக் கிடக்கிறது. நாங்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் பழகுகிறோம்' என்று சொல்லி போராடிய இந்தியாதான், உலகிலேயே அதிக அடிமைகள் உள்ள நாடுகள் பட்டியலில் 5வது இடம் பெற்றுள்ளது. இதைக் களைய அரசு சிறந்த தீர்வைத் தந்தால் மட்டுமே நம் நாட்டில் அடிமைகள் உருவாவதைத் தடுக்கமுடியும். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!