வெளியிடப்பட்ட நேரம்: 02:21 (12/07/2018)

கடைசி தொடர்பு:12:59 (12/07/2018)

காவலரை வீட்டு டைல்ஸ் வேலைக்கு அமர்த்திய துணை கமாண்டன்ட் தூக்கியடிப்பு!

வீட்டுக்கு டைல்ஸ் போடும் வேலைக்காக கேம்ப் பாலோவர்ஸ் காவலர்களைப் பயன்படுத்திய விவகாரத்தில் துணை கமாண்டன்ட் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

வீட்டுக்கு டைல்ஸ் போடும் வேலைக்காக கேம்ப் பாலோவர்ஸ் காவலர்களைப் பயன்படுத்திய விவகாரத்தில் துணை கமாண்டன்ட் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

பி.வி. ராஜூ

கேரள ஏ.டி.ஜி.பி. சுதேஷ்குமார் வீட்டில் ஆர்டர்லியாக பணியமர்த்தப்பட்ட காவலர் கவாஸ்கரை அவரின் மகள் ஸ்நிக்தா தாக்கிய சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காவலர்களை உயர் அதிகாரிகள் தங்கள் வீட்டு வேலைகளைச் செய்ய பயன்படுத்தக் கூடாது என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். இந்த நிலையில், போலீஸ் துணை கமாண்டன்ட் பி.வி. ராஜூ தன்னுடைய வீட்டுக்கு டைல்ஸ் பதிக்கும் பணிக்காக கேம்ப் பாலோவர்ஸ் காவலர்களைப் பயன்படுத்தியுள்ளார். இதுகுறித்து காவலர்கள் டி.ஜி.பி. லோக்நாத் பெகராவிடம் புகார் அளித்தனர். இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க பல்வேறு திரைமறைவு வேலைகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், துணை கமாண்டன்ட் பி.வி.ராஜூ திருச்சூர் போலீஸ் பயிற்சி முகாமுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார்.