வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (12/07/2018)

கடைசி தொடர்பு:12:52 (12/07/2018)

2 மாதங்களில் 16 `கூட்டுக் கொலைகள்' - அதிகரிக்கும் வாட்ஸ்அப் வதந்திகள்!

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இந்தியா முழுக்க இது போன்ற 16 `கூட்டு வன்முறைகள்' (Mob Lynching) பதியப்பட்டுள்ளன. அதில் இறுதியாக கடந்த ஒரு நாளைக்கு முன்னர் (10-07-2018) அஸ்ஸாமில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ருக்மணியை நாம் மறந்திருக்கலாம். கடந்த மே மாதம், திருவண்ணாமலை மாவட்டத்திலிருக்கும் தன் குலதெய்வ கோயிலுக்குச் சென்றவர், அங்கிருந்த குழந்தைகளுக்கு வெளிநாட்டு மிட்டாய்களைக் கொடுத்துள்ளார். குழந்தைகளைக் கடத்த வந்தவர் என்று கருதி அவரை அடித்தே கொன்றுவிட்டனர் பொது மக்கள். அதற்கு முக்கியக் காரணமாக வாட்ஸ்அப் வதந்தி இருந்தது. அது முதல் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல இடங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. 

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இந்தியா முழுக்க இதுபோன்ற 16 `கூட்டு வன்முறைகள்' (Mob Lynching) பதியப்பட்டுள்ளன. அதில் இறுதியாக கடந்த ஒரு நாளைக்கு முன்னர் (10-07-2018) அஸ்ஸாமில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

வாட்ஸ் அப் வதந்தி கொலைகள்

அஸ்ஸாமின் நல்பாரி மாவட்டத்தில் பட்டாசு வெடிக்க எதிர்ப்பு தெரிவித்த ஒரு தொழிலாளி மக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

திருமணம் முடிந்து மணமக்களை வீட்டுக்குள் அழைத்து வரும் சமயம் பட்டாசு வெடித்திருக்கின்றனர், திருமண வீட்டார். அப்போது, அந்தப் பகுதியிலிருந்த 35 வயதான கூலித் தொழிலாளி ஜதின் தாஸ் என்பவர் மீது சில பட்டாசு கங்குகள் பட்டிருக்கின்றன. அதற்காக அவர் அந்த மண வீட்டாரிடம் சண்டைப் போட்டுள்ளார். தொடர்ந்து பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும் வாதாடியுள்ளார். அது ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறவே, அங்கிருந்த பலரும் ஜதின் தாஸைப் போட்டு கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். 

 கொலைகள்

கடந்த ஜூன் மாதம் 8-ம் தேதிதான், அஸ்ஸாமின் கார்பிலாங் மாவட்டத்தில் சில இயற்கை ஒலிகளைப் பதிவு செய்துகொண்டிருந்த இரண்டு இளைஞர்களை, கிராம மக்கள் குழந்தைகளைக் கடத்த வந்தவர்கள் என்று எண்ணி அவர்களை அடித்துக் கொலை செய்தனர். 
இப்படியான சம்பவங்கள் நிகழ்வதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், அதில் மிக முக்கியமான காரணியாக இருப்பது வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான தகவல்கள்தான். இதைத் தடுக்க, மத்திய, மாநில அரசுகள் முழுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பல சமூக ஆர்வலர்களும் குரல் கொடுக்கின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க