வெளியிடப்பட்ட நேரம்: 02:58 (12/07/2018)

கடைசி தொடர்பு:12:51 (12/07/2018)

குஜராத்தில் தொடரும் கனமழை - ஒருவர் பலி!

பர்டோலி எனும் நகரத்தில், வெள்ளத்தில் சிக்கி ஒருவர் பலியானார். தெற்கு குஜராத்தில் வல்சாத், நவ்சாரி, சூரத் ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமான மழைப் பொழிவு இருக்கிறது.

குஜராத்தில் பெய்து வரும் பெரும் மழைக்கு ஒருவர் பலியாகியுள்ளார். 600-க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

தெற்கு குஜராத் மற்றும் செளராஷ்டிரா பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை முதல் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் அந்தப் பகுதிகளின் அணைகள், ஆறுகள், ஏரிகள் என அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன. 

 மழை

பர்டோலி எனும் நகரத்தில், வெள்ளத்தில் சிக்கி ஒருவர் பலியானார். தெற்கு குஜராத்தில் வல்சாத், நவ்சாரி, சூரத் ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமான மழைப் பொழிவு இருக்கிறது. பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி, போக்குவரத்து முடங்கியுள்ளது. 

அடுத்த 24 மணி நேரத்துக்கு தொடர் மழை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், 600-க்கும் அதிகமான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 12-க்கும் அதிகமான பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது தெற்கு குஜராத்தில் தொடங்கியுள்ள மழை வெகு விரைவிலேயே, வடக்கு மற்றும் மத்திய குஜராத் பகுதிகளுக்கும் பரவும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க