மோடியின் பெயரை கின்னஸில் சேர்க்கப் பரிந்துரை..! கின்னஸ் அமைப்புக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர்

நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றதிலிருந்தே தொடர்ந்து பல உலக நாடுகளிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இது பல நாள்களாகவே கடுமையான விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக் கடிதத்தை, கின்னஸ் அமைப்புக்கு எழுதியுள்ளார் கோவா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சித்  தலைவர் சங்கல்ப் அமோன்கர்.

நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றதிலிருந்தே தொடர்ந்து பல உலக நாடுகளிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இது பல நாள்களாகவே கடுமையான விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. மக்களின் வரிப் பணத்தை தன் இஷ்டம் போல் செலவு செய்வது மிக முக்கிய குற்றச்சாட்டு. அதே சமயம், உள்நாட்டுப் பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் உலக நாடுகளுக்கு சுற்றுலா சென்று கொண்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது.

பிரதமர் - நரேந்திர மோடி 

இந்நிலையில், கோவா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவர் சங்கல்ப் உலக கின்னஸ் அமைப்புக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில், 'நாங்கள் எங்கள் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை கின்னஸுக்குப் பரிந்துரைப்பதில் பெரும் மகிழ்ச்சியும், மனநிறையும் கொள்கிறோம். இந்த இந்திய தேசத்தின் சொத்துகளையும், பொதுமக்களின் வரிப்பணத்தையும் கொண்டு கடந்த நான்காண்டுகளில் 52 நாடுகளுக்கு மொத்தம் 41 பயணங்களை மேற்கொண்டு சாதனைப் படைத்துள்ளார். மக்களின் வரிப்பணத்தை இப்படி செலவு செய்த பிரதமருக்கு கின்னஸ் பரிசு வழங்க வேண்டும்' என்று எழுதியுள்ளார். 

மேலும், இது குறித்து அவர் கூறுகையில் ``நரேந்திர மோடி ஆட்சியின் மோசடிகளையும், முட்டாள்தனத்தையும் எடுத்துக்காட்டவே இதை நான் செய்தேன். இந்தியாவைவிட வெளிநாடுகளிலேயே நம் பிரதமர் அதிக நேரத்தை செலவழித்துள்ளார். ஆனால், நம் நாட்டிலோ ஒவ்வொரு நாளும் பிரச்னைகள் அதிகமாகிக் கொண்டேயிருக்கின்றன' என்று தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!