வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (12/07/2018)

கடைசி தொடர்பு:12:43 (12/07/2018)

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல்..! செலவுகளைப் பட்டியலிட்ட தேர்தல் ஆணையம்!

தேர்தல் ஆணையம்

த்திய பா.ஜ.க ஆட்சி வரும் 2019-ம் ஆண்டுடன் நிறைவடைகிறது. இதனால், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலையும் நடத்தி முடிக்க பா.ஜ.க அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதுதொடர்பான மத்திய சட்ட ஆணையத்தின் கருத்து கேட்பு கூட்டத்தில் நான்கு தேசியக் கட்சிகள் மட்டுமே இதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது. மற்ற 11 கட்சிகள் எதிர்ப்பையே பதிவு செய்திருக்கிறது. தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க கூட இதற்கு எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. 

இந்நிலையில், தேர்தல் தொடர்பாக சட்ட ஆணையத்திடம், தலைமைத் தேர்தல் ஆணையம் விரிவான அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. அதில், இந்தியா முழுவதும் நாடாளுமன்றம், சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒன்றாக நடத்தி முடிப்பதற்காக செலவுகள், நடைமுறை விவரங்கள், சட்டத்திட்ட நடைமுறைகள் ஆகியவற்றை விரிவாகக் கொடுத்திருக்கிறது. அதில், 2019 தேர்தலுக்காக கூடுதலாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாங்குவதற்கே 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவாகுமாம். மக்கள் தொகை அடிப்படையில் வாக்குச்சாவடிகள் வருங்காலத்தில் அதிகரிக்கப்படும் என்பதால் 2024-ல் நடக்கும் தேர்தலுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு மட்டும் 14 ஆயிரம் கோடி வரை செலவாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.