7,000 சர்வர்களில் ஆதார் தகவல்கள் பாதுகாப்பு! - சத்தியநாராயணா விளக்கம் | Aadhaar data is completely safe in 7,000 servers says Sathyanarayana

வெளியிடப்பட்ட நேரம்: 09:35 (12/07/2018)

கடைசி தொடர்பு:12:40 (12/07/2018)

7,000 சர்வர்களில் ஆதார் தகவல்கள் பாதுகாப்பு! - சத்தியநாராயணா விளக்கம்

ஆதார் எண் இணைப்புடன் கூடிய நேரடி பரிவர்த்தனை மூலம் ரூ.90,000 கோடி அளவில் சேமிக்கப்பட்டுள்ளதாக, உதய் (UIDAI) தலைவர் ஜே. சத்தியநாராயணா தெரிவித்துள்ளார். 

ஆதார் குறித்து சத்தியநாராயணா


பத்து ஆண்டுக்கால காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்திக் கடந்த 2014-ம் வருடம் மோடி தலைமையில் பா.ஜ.க மத்தியில் ஆட்சி அமைத்தது. பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார். அதில், ஒன்று ஆதார். ஆதாருக்கு எதிரான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், அரசின் திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உதய் தலைவர் ஜே.சத்தியநாராயணா, `ஆதார் திட்டத்துக்காக ரூ.10,000 கோடி செலவிடப்படவில்லை. நாட்டில் உள்ள 121 கோடி பேருக்கு ஆதார் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் தோராயமாக 3 கோடி மின் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. மார்ச் 31-ம் தேதி நிதியாண்டின்படி பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, உணவு மற்றும் பொது விநியோகம், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட இதர துறைகளில் ஆதார் இணைப்புடன் நடந்த நேரடி பரிவர்த்தனை மூலம் ரூ.90,012 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது விநியோகம் உள்ளிட்டத் துறைகளில் இந்த இணைப்பு கட்டாயமாக்கப்பட்டதால், போலி பயனாளிகளை எளிதில் கண்டுபிடிக்க முடிந்தது. ஆதார் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது. பெங்களூரூ மற்றும் மானேசர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 7,000 சர்வர்களில் தகவல்கள் வைக்கப்பட்டுள்ளன. எந்தத் தகவலும் வெளியில் கசியவில்லை' என்றார்.