`பேட்மேன்' போல் `பேட்வுமன்' இவர்கள்..! - அசத்தும் சண்டிகர் பெண்கள் #Padwomen

நடிகர் அக்‌ஷய் குமாரின் `பேட்மேன்' படம் பார்த்து, `பேட்வுமன்' ஆக அவதாரம் எடுத்துள்ளனர் சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்த ஜான்வி சிங் மற்றும் லாவண்யா ஜெயின். 

பேட்வுமன்

பெண்களுக்காகக் குறைந்த செலவில் நாப்கின்களைத் தயாரித்து சாதனைப் படைத்த கோயம்புத்தூரைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து உருவான படம் `பேட்மேன்' (padman). பாலிவுட்டின் ஆக்‌ஷன் கிங் அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான இப்படம், அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. இந்தத் திரைப்படத்தைப் பார்த்த பஞ்சாப் மாநிலம் சண்டிகரைச் சேர்ந்த ஜான்வி சிங் (15) மற்றும் லாவண்யா ஜெயின் (17), குடிசைப் பகுதிகளில் வாழும் பெண்களுக்காக `ஸ்பாட் ஃபிரீ' என்ற சுகாதாரப் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர். இவர்களின் இந்தச் செயலுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், `மாதவிடாய்க் காலங்களில் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற சுகாதார வழிமுறைகள் குறித்து, எங்கள் நகரில் உள்ள குடிசைப் பகுதியில் வசிக்கும் பெண்களிடம் விழிப்பு உணர்வு பிரசாரம் செய்து வருகிறோம். அவர்களுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்களை வாங்கிக் கொடுக்கலாம் என முடிவு செய்தோம். ஆனால், நாப்கின் விலை அதிகமாக இருப்பதால், குறைந்த விலையில் நாப்கின் தயாரிக்க முடிவுசெய்து, ரூ.2-க்கு சானிட்டரி நாப்கின்களைத் தயாரித்தோம். பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதைத் தவிர்க்க 10 சானிட்டரி நாப்கின்கள் கொண்ட பாக்கெட்டை காகிதங்களில் சுற்றிக் கொடுத்து வருகிறோம். இதன் அடுத்தகட்டமாக பள்ளி மாணவிகளிடம் விழிப்பு உணர்வு பிரசாரத்தை தொடங்க இருக்கிறோம்' என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!