பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் லாபத்தை அதிகரித்துக்கொள்ள அருமையான வாய்ப்பு! | Fundamental Analysis two days program at Salem

வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (12/07/2018)

கடைசி தொடர்பு:13:45 (12/07/2018)

பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் லாபத்தை அதிகரித்துக்கொள்ள அருமையான வாய்ப்பு!

பணத்தை வெறுமனே சேமிப்பதோடு நிறுத்திவிடாமல், அதை வெற்றிகரமாக முதலீடு செய்வதே புத்திசாலித்தனம் என்ற சிந்தனை பொதுமக்களிடையே பெருகி வருகிறது. வெற்றிகரமான முதலீடு என்பது இன்றைய காலகட்டத்தில் பங்குச்சந்தை முதலீடாகத்தான் இருக்கமுடியும். பங்குச்சந்தையில் எப்படி முதலீடு செய்வது? முதலீடு செய்யும் நிறுவனங்களை எப்படித் தேர்வு செய்வது, எப்படி அவர்களின் செயல்பாட்டைக் கண்காணிப்பது போன்ற பல விஷயங்கள் பொதுமக்களிடையே கேள்விக்குறியாகவே உள்ளன. இதுகுறித்த விழிப்பு உணர்வை ஊட்டுவதற்கு, நாணயம் விகடன் சார்பில் பங்குச் சந்தை ஃபண்டமென்டல் அனாலிசிஸ் பயிற்சி வகுப்பை கோவை, சென்னை, மதுரை, சேலம், திருச்சி போன்ற நகரங்களில் நடத்திவிட்டு, வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் சேலத்தில் நடத்தவிருக்கிறது.

முதலீடு

நாணயம் விகடன் நடத்தும் இந்த இரண்டு நாள் கட்டணப் பயிற்சி வகுப்பு, 2018 ஜூலை 21 மற்றும் 22 (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சி வகுப்புக்கான கட்டணம் ரூ.6,000 மட்டுமே. எக்ட்ரா - பங்குச் சந்தைப் பயிற்சி மையத்தின் முதன்மைச் செயல் அதிகாரி தி.ரா.அருள்ராஜன் இந்தப் பயிற்சி வகுப்பை நடத்துகிறார். இந்தியாவின் வளர்ச்சியை, இன்னும் சரியாகச் சொல்லப்போனால் இந்தியப் பங்குச் சந்தைகளின் வளர்ச்சியை தன் வளர்ச்சியாக மாற்றிக்கொள்ளும் ஆர்வம் உள்ள முதலீட்டாளர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பங்குச்சந்தை முதலீட்டில் ஓரளவு அனுபவம் இருந்தாலும், இதிலிருக்கும் டெக்னிக்கலான அறிவை விரிவுபடுத்திக்கொள்வதும் அவசியம். ஒரு நிறுவனத்தின் பங்கு விலை ஏன் ஏறுகிறது, ஏன் இறங்குகிறது? ஒரு நிறுவனத்தின் பங்குகளைத் தேர்ந்தெடுக்குமுன்பாக அந்த நிறுவனத்தின் செயல்பாட்டை எவ்வாறு கணிப்பது? தங்களுடைய பங்குச்சந்தை போர்ட்ஃபோலியோவை எவ்வாறு உருவாக்குவது? இ.பி.எஸ், பிஇ ரேஷியோ வைத்து எப்படி ஒரு நிறுவனத்தை தேர்வு செய்வது போன்ற விவரங்களை இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வதன்மூலம் கற்றுக்கொள்ள முடியும்.

மேலும், இந்த இரண்டு நாள் கட்டணப் பயிற்சி வகுப்பில், பேலஸ்ன்ஸ் ஷீட்டில் உள்ள தகவல்கள் என்ன? அதை எப்படிப் படிப்பது?, லிக்விடிட்டி ரேஷியோ, ஆக்டிவிட்டி ரேஷியோ, பிராஃபிட் ரேஷியோ மற்றும் லிவரேஜ் ரேஷியோவை வைத்து எப்படி முடிவெடுப்பது, டாப் டவுன் அப்ரோச் மற்றும் பாட்டம் அப் அப்ரோச் என்றால் என்ன, மேக்ரோ காரணிகள் எப்படி சந்தையை வழிநடத்துகின்றன என்பன போன்றவற்றையும் விவரமாகத் தெரிந்துகொள்ளலாம்.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், இங்கு கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்து, பணத்தைச் செலுத்தி பதிவு செய்துகொள்ளவும், பயிற்சி வகுப்பு நடக்கும் இடம், நேரம் ஆகிய விவரங்கள் மின்னஞ்சல் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பிறகு தெரிவிக்கப்படும். 

மேலும் விவரங்களுக்கு : +91 9940415222