திருடுவதற்கு முன் பிரேக் டான்ஸ்... வைரலான திருடனின் வீடியோ

டெல்லியில், பூட்டிய கடையின் கதவை உடைத்துத் திருட முயன்ற கும்பலைச் சேர்ந்த ஒருவன், திருடுவதற்கு முன் உற்சாகமாக நடனமாடும் காட்சி சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. `மென்மையான குற்றவாளி இவர்' என்று நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கலாய்த்து வருகின்றனர். 

திருடன்

டெல்லி, லஹோரி கேட் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் பூட்டிய கடைகளின் கதவை உடைத்து தங்களது கை வரிசையைக் காட்டியுள்ளனர் ஐந்து திருடர்கள். கடையில் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிள்ள பொருள்களையும் ரொக்கமாகப் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். மேலும், அதே பகுதியில் இருக்கும் நான்கு கடைகளிலும் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இவர்களை அடையாளம் கண்ட போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

இந்த நிலையில், அந்தக் கும்பல் கடையில் திருடும் வீடியோ காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில், திருடச் செல்லுவதற்கு முன் கும்பலைச் சேர்ந்த திருடன் ஒருவன் உற்சாகமாக நடனமாடி வருகிறான். அதன்பின், தன் சக கூட்டாளியை அழைத்து கடையின் பூட்டை உடைக்க முயல்கிறார். திருடன் நடனமாடும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது. `மைக்கேல் ஜாக்சன் போல் நடமாடுகிறார்; மென்மையான குற்றவாளி' என்று நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கலாய்த்து வருகின்றனர். 

Videos Credit - ANI

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!