நடுவானில் நேருக்கு நேர் சந்தித்த விமானங்கள்! கதிகலங்கிய 328 பயணிகள்

இண்டிகோ ஏர்பஸ் ஏ-320 ரக விமானங்கள் இரண்டு, நடுவானில் நேருக்கு நேராக மோதிக்கொள்ள இருந்தது. இந்தப் பெரும் விபத்து, டி.சி.ஏ.எஸ் தொழில்நுட்பத்தால் தவிர்க்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளன. 

இண்டிகோ

இண்டிகோ நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு விமானங்கள், கோயம்புத்தூரிலிருந்து ஹைதராபாத்துக்கும்                                                      (6E-779), பெங்களூரிலிருந்து கொச்சிக்கும் (6E-6505) கடந்த 10-ம் தேதியன்று புறப்பட்டுச் சென்றது. இதில், சுமார் 328 பயணிகள் சென்றுள்ளனர். இந்நிலையில், பெங்களூரு வான்வெளியில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்துசென்ற இரண்டு விமானங்கள், 8 கிலோ மீட்டர் தொலைவில் நேருக்கு நேராக சந்தித்துக்கொண்டன. அப்போது, டி.சி.ஏ.எஸ் (Traffic collision avoidance system) என்ற அதிநவீன தொழில்நுட்பம்மூலம் இரண்டு விமானங்களின் விமானிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், நடக்க இருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

எச்சரிக்கை அலாரம் ஒலித்ததையடுத்து விமானிகள் துரிதமாகச் செயல்பட்டு, வெறும் 200 அடி தொலைவில், விமானத்தின் திசையைத் திருப்பினர். இதுதொடர்பாக, விமான விபத்து விசாரணை ஆணையம் (Aircraft Accident Investigation Board) விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதேபோல, கடந்த மே 21-ம் தேதி விசாகப்பட்டினம்- பெங்களூருக்கு புறப்பட்டுச் சென்ற 6E- 647 இண்டிகோ விமானம், இந்திய விமானப்படை விமானத்தில் மோத இருந்த விபத்தும் தவிர்க்கப்பட்டது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!