நீதித்துறையில் மாற்றம் போதாது; புரட்சி வேண்டும்..! உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் சூளுரை

சாமானிய மக்களுக்கு நீதிமன்றங்கள் சேவை செய்வதற்கு நீதித்துறையில் மாற்றம் மட்டும் போதாது. புரட்சி வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் 'நீதியின் பார்வை' என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாய் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், 'ஜனநாயகத்தைக் காப்பதில் சுதந்திரமான செய்தியாளர்களும், குரல் எழுப்பும் நீதிபதிகளும் முதல்வரிசையில் இருக்கின்றனர். சுதந்திரம் கிடைத்த முதல் ஐம்பது ஆண்டுகளில் நீதிமன்றங்கள் உருவாக்கிய நீதிபரிபாலனங்களை நாம் இப்போது அறுவடை செய்கிறோம். நீதித்துறைதான், நம்பிக்கையின் கடைசி வாயிலாகவும், அரசியல்சாசனத்தின் பார்வையைக் காப்பாற்றும் காவலனாகவும் உள்ளது. சாமானிய மக்களுக்கு நீதிமன்றங்கள் சேவை செய்வதற்கு நீதித்துறையில் மாற்றம் மட்டும் போதாது. புரட்சி வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். மேலும், நீதித்துறையின் திறமையின்மை மட்டும் தாமதமான செயல்பாடுகள் குறித்தும் வருத்தம் தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!