வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (13/07/2018)

கடைசி தொடர்பு:10:30 (13/07/2018)

மதிய உணவு உட்கொண்ட 50 குழந்தைகள்! மத்தியப்பிரதேசத்தில் நிகழ்ந்த சோகம்

மத்தியப்பிரதேசத்தில் மதிய உணவை உட்கொண்ட 50 குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உணவு மாதிரிகளை தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர் போலீஸார். 

மத்திய பிரதேசம்

Photo Credit - ANI

மத்தியப்பிரதேச மாநிலம் தமோ(Damoh) நகர்ப் பகுதியில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, மதிய உணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உணவு அளிக்கப்பட்டுள்ளது. உணவை எடுத்துக்கொண்ட மாணவர்கள் சற்று நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். 45-க்கும் அதிகமான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மத்திய பிரதேசம் உணவு

Photo Credit - ANI

இதுதொடர்பாக போலீஸிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ள போலீஸார் உணவு மாதிரிகள் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இதேபோல், டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதிய உணவு சாப்பிட்ட 30 மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அப்போது, சமைத்த உணவில் பல்லி இருந்தது விசாரணையில் தெரியவந்தது.