வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (13/07/2018)

கடைசி தொடர்பு:12:30 (13/07/2018)

300 அடி உயர கிரேனில் ஏறி மிரட்டிய வாலிபர்! இரவில் மீட்கப் போராடிய டெல்லி போலீஸ்

டெல்லியில், 300 அடி உயர கிரேனில் ஏறி தற்கொலைக்கு முயற்சி செய்த வாலிபரைப் பத்திரமாக மீட்டுள்ளனர் தீயணைப்புப் படை வீரர்கள். 

கிரேன்

Photo Credit - ANI

டெல்லியில் பஹர்கஞ்ச் என்ற பகுதியில் ஹோட்டல் கட்டுமானப் பணி ஒன்று நடந்து வருகிறது. இந்த இடத்தில் நேற்றிரவு சுமார் 9 மணியளவில் வாலிபர் ஒருவர், கட்டுமானப் பணிக்குப் பயன்படுத்தப்படும் கிரேன் மீது ஏறியுள்ளார். 300 அடி உயர ராட்சத கிரேனில் ஏறிய அவர், அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், அந்த வாலிபரைக் கீழே இறங்குமாறு வலியுறுத்தியுள்ளனர். அதை ஏற்க மறுத்த அவர், `என் அருகில் வந்தால் கீழே விழுந்து விடுவேன்' என மிரட்டல் விடுத்துள்ளார். அதன்பின், தீயணைப்புப் படையினரும் விரைந்துள்ளனர். 

கிரேன்

Photo Credit - ANI

கிரேனில் ஏறிய அவரை உயிருடன் மீட்டெடுக்க இரவு முழுவதும் காவல்துறையினரும் தீயணைப்புப் படைவீரர்களும் போராடி உள்ளனர். இரவு முழுவதும் நடந்த மீட்புப் போராட்டத்துக்குப் பிறகு இன்று காலை அவரைக் கீழே இறக்கினர்.