திரையரங்குகளில் வெளி உணவுகளுக்கு அனுமதி: மகாராஷ்டிரா அரசு அதிரடி!

மகாராஷ்டிராவில், வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வெளி உணவுகளைத் திரையரங்குகளுக்கு எடுத்துச்செல்ல அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது.

திரையரங்கு

திரையரங்குகளுக்கு வரும் பொதுமக்கள், வெளி உணவுகளை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை.இதனால், அங்கு விற்கப்படும் உணவுப் பொருள்களை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. திரையரங்குகளில் விற்கப்படும் பண்டங்களின் விலை இரண்டு மடங்காக இருக்கிறது. தண்ணீர் எடுத்துச்செல்வதற்குக்கூட  பல இடங்களில் அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் மகாராஷ்டிரா அரசு, வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அம்மாநிலத்தில் உள்ள திரையரங்குகளுக்குள் வெளி உணவுகளை எடுத்துச்செல்ல அனுமதியளித்துள்ளது. 

இதுகுறித்துப் பேசிய அம்மாநில உணவுத்துறை அமைச்சர் ரவீந்திர சவான்,  ”ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் திரையரங்குகளுக்குள் வெளி உணவுகளை எடுத்துச்செல்லலாம். இதைத் தடுப்பவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திரையங்குகளில் விற்கப்படும் உணவுப் பொருள்களுக்கு கூடுதல் விலை நிர்ணயிக்க எந்த விதியும் இல்லை. ஒரே பொருளுக்கு இரண்டு விலை எப்படி நியாயமாகும். மாநில அரசு மல்டிபிளக்ஸ் உரிமையாளர்களுடன் பேசி உணவுப் பொருள்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் ” என்றார். 

கடந்த சில நாள்களுக்கு முன்பு, மும்பை உயர் நீதிமன்றம் மாநில அரசிடம் கேள்வி எழுப்பி இருந்தது. அதில், உணவுப் பொருள்களை வெளியிலிருந்து கொண்டுவர எப்படி தடை விதிக்கலாம் எனக்கேட்டது. இதையடுத்து, தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!