வெளியிடப்பட்ட நேரம்: 18:47 (13/07/2018)

கடைசி தொடர்பு:18:47 (13/07/2018)

புதிய உச்சத்தை அடைந்தபின் வலுவிழந்தது சந்தை 

ஒரு பாஸிட்டிவான துவக்கத்திற்குப் பின் சரிவைக் கண்டாலும், மீண்டும் வலுப்பெற்று  ஓரளவு நல்ல நிலையில் இருந்தபின் வர்த்தக நேர இறுதியில் மறுபடியும் வலுவிழந்து சிறிய நஷ்டத்துடன் இன்று முடிவுற்றது.  

மும்பை பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் சுமார் 200 புள்ளிகள் உயர்ந்து 36,740.07 என்ற புதிய உச்சத்தை அடைந்தாலும், இறுதியில், 6.78 புள்ளிகள் அதாவது 0.02 சதவிகித நஷ்டத்துடன் 36,541.63 என முடிவுற்றது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடு 4.30 புள்ளிகள் அதாவது 0.04 சதவிகிதம் சரிந்து 11,018.90-ல் முடிந்தது.

ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகள் முன்னேற்றம் கண்ட போதிலும்,  இந்திய சந்தையில், மதியத்திற்கு மேல்  முதலீட்டளர்கள் சற்று நிதானத்துடன் செயல்பட்டனர் என்று கூறலாம்.  
இதற்கு, நேற்று வெளியான தொழில் உற்பத்தி பற்றிய அறிக்கையின் படி இந்தியாவின் மொத்த உற்பத்தி மே மாதத்தில் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவான அளவே உயர்ந்திருப்பது காரணமாக இருக்கக்கூடும்

வெளிவரவிருக்கும் காலாண்டு செயல்பாட்டுக்கான அறிவிப்புகள் பற்றிய எதிர்பார்ப்பு சந்தையின் போக்கைத் தீர்மானித்தது எனலாம். 
சந்தையின் இன்றைய வர்த்தக நேரத்திற்குப் பின் இன்போசிஸ் நிறுவனம் தனது காலாண்டு அறிக்கையை வெளியிட இருக்கும் நிலையில் அந்நிறுவனத்தின் பங்குகள் நல்ல ஏற்றம் கண்டு, பின்னர் சிறிது லாபத்தை இழந்தாலும் பாசிட்டிவாக நிலைபெற்றது.

அமெரிக்க டாலருக்கெதிராக  இந்திய ரூபாயின் மதிப்பு சற்று வலுப்பெற்றது சந்தைக்கு சாதகமாக இருந்தது.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1.3%
இன்போசிஸ் 1.1%
பஜாஜ் ஆட்டோ 1.1%
சொனாட்டா சாப்ட்வேர் 7.3%
போர்டிஸ் ஹெல்த்கேர் 4%
எம்பாசிஸ் 4%
டாக்டர் லால்பாத் லேப்ஸ் 3.5%
ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ்  3.3%
டைட்டன் 3.4%
அதானி பவர்  3.1%

விலை இறங்கிய பங்குகள் :

ஓ.என்.ஜி.சி  2.8%
ஆக்ஸிஸ் பேங்க் 2.4%
ஐ.டி.சி  2.3%
ஸ்டேட் பேங்க் 2%
ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் 1.6%
பி.வி.ஆர்  13.1%
என்.சி.சி. 8.7%
ஜி.என்.எப்.சி 8%
கர்நாடக பேங்க் 7.9%

இன்று மும்பை பங்குச் சந்தையில் 812 பங்குகள் மட்டுமே லாபத்துடன் முடிந்தன. 1825 பங்குகள் விலை சரிந்தும், 131 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.