பாவமன்னிப்பு கேட்ட பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் மேலும் ஒரு பாதிரியார் கைது! | One more priest arrested in the rape case

வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (14/07/2018)

கடைசி தொடர்பு:02:00 (14/07/2018)

பாவமன்னிப்பு கேட்ட பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் மேலும் ஒரு பாதிரியார் கைது!

திருவல்லாவில் பாவமன்னிப்பு கேட்கச்சென்ற திருமணம் ஆன இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மேலும் ஒரு பாதிரியார் போலீஸாரால் இன்று கைது செய்யப்பட்டார்.

ஜான்சன்

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லாவில் அரசு உதவிபெறும் ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்த திருமணம் ஆன பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நான்கு பாதிரியார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருமணத்துக்கு முன்பு பாதிரியார் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருந்த அந்தப் பெண் திருமணத்துக்குப் பின்பு, திருவல்லா மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சிரியன் சர்ச் பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு கேட்கச் சென்றிருக்கிறார். அப்போது, செய்த தவறுகளை அவரின் கணவனிடம் கூறிவிடுவதாக மிரட்டி, அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் பாதிரியார். அத்துடன் அதை படம் பிடித்து தனது நண்பர்களான நான்கு பாதிரியார்களுக்கு அனுப்பியுள்ளார். அந்த புகைப்படத்தை காட்டி மிரட்டி அந்த பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அந்த பெண்ணின் கணவர் இந்த விவகாரம் குறித்து சர்ச்சையை கிளப்பினார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், திருமணமான இளம்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பாதிரியார்கள் ஆபிரகாம் வர்க்கீஸ், ஜெய்ஸ் கே.ஜார்ஜ், ஜோப் மேத்யூ, ஜான்சன் மேத்யூ ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து பாதிரியார் ஜோப் மேத்யூ நேற்று கொல்லம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதை தொடர்ந்து பத்தணம்திட்டா கோழஞ்சேரியில் அவரது வீட்டருகில் நின்ற ஜான்சன் மேத்யூவை  இன்று காவல்துறையினர் கைது செய்யதனர். இதுவரை 2 பாதிரியார்கள் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.