வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (14/07/2018)

கடைசி தொடர்பு:11:22 (14/07/2018)

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் காலிப் பணியிடங்கள் - வீடியோ கான்ஃபரன்சிங்கில் வழக்கு விசாரணை!

கொல்கத்தா, சென்னை, புனே மற்றும் போபாலில் இருக்கும் பசுமைத் தீர்ப்பாயங்களில் ஆள்பற்றாக்குறை பெரியளவில் இருக்கின்றன. மூன்றில் ஒரு பங்குக்கான பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. பல பதவிகளுக்கு ஆள் இல்லாமல் இருக்கிறது.

ஆள் பற்றாக்குறையை சமாளிக்க வீடியோ கான்ஃபரன்சிங் (Video Conferencing) மூலம் வழக்குகளை விசாரிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal) முடிவு செய்துள்ளது. 

சுற்றுச்சூழல் சம்பந்தமான வழக்குகளை விசாரிப்பதற்கென தனி தீர்ப்பாயம் 2010-ம் ஆண்டு இந்தியாவில் உருவாக்கப்பட்டது. டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கிளைகள் இருக்கின்றன.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

குறிப்பாக, கொல்கத்தா, சென்னை, புனே மற்றும் போபாலில் இருக்கும் பசுமைத் தீர்ப்பாயங்களில் ஆள்பற்றாக்குறை பெரியளவில் இருக்கின்றன. மூன்றில் ஒரு பங்குக்கான பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. பல பதவிகளுக்கு ஆள் இல்லாமல் இருக்கிறது. 
இந்த ஆள் பற்றாக்குறை காரணமாக, பல மாநிலங்களிலிருந்தும் பல முக்கிய வழக்குகள் டெல்லி தலைமையகத்தில் வந்து குவிகின்றன அங்கு அனைத்துப் பணியிடங்களும் நிரப்பப்பட்டிருந்தாலும் கூட, இத்தனை வழக்குகளை ஒரே சமயத்தில் விசாரிப்பதில் சிக்கல் இருக்கிறது. இதன் பொருட்டு, தற்காலிகமாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் வரை வழக்குகள் வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

வழக்குகள் முக்கியமானவையாக இருப்பதால், டெல்லியில் நடக்கும் வழக்கு விசாரணைகளுக்கு நாடு முழுவதிலிருந்து வழக்குத் தொடுத்தவர்கள் பெரும் நேரத்தையும், பணத்தையும் செலவு செய்து டெல்லிக்குப் போகும் சூழல் இருக்கிறது. அதைத் தற்காலிகமாக நிறுத்த இந்த வீடியோ கான்ஃபரன்சிங் முறை உதவும். அடுத்த ஒரு மாதத்துக்குள்ளாக அனைத்து காலிப் பணியிடங்களும் நிரப்பப்பட்டு, இந்தப் பிரச்னைகள் தீர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க