900 ஆண்டுகள் பழைமையான புதையல்!' - சாலைப் பணியின்போது கண்டெடுப்பு

சட்டீஸ்கர் மாநிலத்தில் 12-ம் நூற்றாண்டின் பயன்பாட்டில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் அடங்கிய புதையல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த நாணயங்களில் எழுத்துகள் உள்ளதாகவும், இவை யாதவ் வம்சத்தினர் ஆட்சி செய்த காலத்தைச் சேர்ந்தவை எனவும் கூறப்படுகிறது. 

புதையல்

Photo Credit - ANI

சட்டீஸ்கர் மாநிலம், கொண்டகான் மாவட்டத்தில் உள்ள கொர்கொட்டி - பெட்மா கிராமங்களின் இடையில் சாலை கட்டுமானப் பணி நடந்து வருகிறது. அப்போது, பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் புதையல் ஒன்றைக் கண்டெடுத்துள்ளார். அந்த மண்பாண்டப் புதையலில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் இருந்துள்ளன. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நீல்காந் தேகம் கூறுகையில், `அரசு சார்பில் கொர்கொட்டி-பெட்மா கிராமங்கள் இடையில் சாலை கட்டுமான வேலைப் பணியில் ஈடுபட்ட பெண் தொழிலாளி ஒருவர் மண்பாண்டம் ஒன்றைக் கண்டெடுத்துள்ளார். இதைக் கிராம நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். அதன்பின், மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் தரப்பட்டது. மண்பாண்டத்தில் 57 தங்க நாணயங்களும் சில வெள்ளி நாணயங்கள் இருந்தன. இதுகுறித்து தொல்லியல் துறையினருக்குத் தகவல் தரப்பட்டது. தொல்பொருள் துறையினர் இதுகுறித்து மேலும் சில தகவலைத் தருவார்கள்' என்றார்.`இந்த நாணயங்கள் 12 அல்லது 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வித்தர்பா என்ற பகுதியில் யாதவ் வம்சத்தினர் ஆட்சி செய்தபோது பயன்பாட்டில் இருந்த நாணயங்களாக இருக்கலாம். மேலும், நாணயங்களில் சில எழுத்துகளும் உள்ளன' என்ற முதற்கட்ட ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!