சசி தரூர் சர்ச்சை பேச்சு - கொல்கத்தா நீதிமன்றம் சம்மன்!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசி தரூர், கொல்கத்தா நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 'பா.ஜ.க மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினால் இந்து பாகிஸ்தானாக இந்தியா மாறிவிடும்' என்று அவர் பேசியதற்காக இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

சசி தரூர்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கடந்த 11-ம் தேதியன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், `வரும் 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க மீண்டும் வெற்றி பெற்றால் இந்து பாகிஸ்தானாக இந்தியா மாறிவிடும். பா.ஜ.க புதிய அரசியலமைப்பை எழுதி உருவாக்குவார்கள்' என்று சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்துப் பேசினார். இதற்கு, பா.ஜ.க கண்டனம் தெரிவித்தது. கட்சி மேலிடம் சசி தரூரை அழைத்து, `பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது கவனத்துடன் பேச வேண்டும்' என்று அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகியது. 

இந்நிலையில், கொல்கத்தாவைச் சேர்ந்த வழக்கறிஞர் சுமீத் சவுத்ரி என்பவர், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் சசி தரூரின் கருத்துக்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தின் முன் சசி தரூர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!