வெளியிடப்பட்ட நேரம்: 15:01 (14/07/2018)

கடைசி தொடர்பு:15:01 (14/07/2018)

`புதிய நியமன எம்.பி-க்களை நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு!

மாநிலங்களவைக்கு 4 புதிய நியமன எம்.பி-க்களை நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

ராம்நாத்கோவிந்த்

இந்திய நாடாளுமன்றம் இரண்டு சட்ட அவைகளைக் கொண்டு இயங்கி வருகின்றது. அதில் மாநிலங்களவையில்  மொத்தம் 250 உறுப்பினர்கள் இருப்பர். அதில் 12 உறுப்பினர்கள் குடியரசுத்தலைவரால் தேர்ந்தேடுக்கப்படுவர். மக்களவையில் மொத்தம் 542 உறுப்பினர்கள் இருப்பர். மேலும், இரண்டு பேரை குடியரசுத்தலைவர் நியமிப்பார். குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுவர்கள் நியமன எம்.பி-க்கள் என்று அழைக்கப்படுவர். அந்தவகையில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகை ரேகா, அனு ஆகா, கே.பராசரன் உள்ளிட்டோர் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இருந்து வந்தனர். 

கடந்த ஏப்ரல் மாதத்துடன் இவர்களது பதவிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து காலியாக இருந்த இடங்களுக்கு நியமன எம்.பி-க்கள் 4 பேரை நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், விவசாய சங்கத்தலைவர் ராம் ஷேக்கல், எழுத்தாளர் ராகேஷ் சின்ஹா, பிரபல சிற்பி ரகுநாத் மொஹபத்ரா, நடனக்கலைஞர் சோனல் மன்சிங் ஆகியோர் புதிய நியமன எம்.பி-க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.