மகாராஷ்ட்ரா பள்ளியில் பிடிக்கப்பட்ட 60 பாம்புகள்!

மகாராஷ்ட்ராவில் ஒரு பள்ளியின் சமயலறையில் இருந்து கொடிய விஷமுள்ள 60 பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்ட்ரா

மகாராஷ்ட்ரா மாநிலம் பங்கரா கிராமத்தில் இயங்கி வரும் பள்ளியில் கொடிய விஷமுள்ள 60 பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளன. அப்பள்ளியில் சமையல் வேலை பார்க்கும் பெண் சமயலைறையில் அடிக்கி வைக்கப்பட்டிருந்த மரக்கட்டைகளை எடுத்துள்ளார். அப்போது இரண்டு பாம்புகள் செல்லவதை கவனித்தவர் எல்லா கட்டைகளையும் அப்புறப்படுத்த முயன்றுள்ளார். கட்டைகளுக்கு அடியில் ஏராளமான பாம்புகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியரிடம் தெரிவித்துள்ளார். பாம்பு குறித்த தகவல்கள் கிராமத்திற்குள் பரவ கம்புகளுடன் வந்துவிட்டனர். அவர்களை தடுத்த தலைமையாசிரியர் பாம்பு பிடிப்பவருக்கு தகவல் தெரிவித்தார். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு பள்ளியில் இருந்து 60 பாம்புகள் பிடிக்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய அப்பள்ளியின் தலைமையாசிரியர்,  “இத்தனை பாம்புகளை கண்டதும் அனைவரும் பயந்து விட்டோம். கிராம மக்கள் சிலர் கற்கள் மற்றும் கட்டைகளை கொண்டு பாம்புகளை கொல்ல சென்றனர். நாங்கள் அவர்களை தடுத்து விட்டோம். பாம்பு பிடிப்பவருக்கு தகவல் தெரிவித்ததும் அவர் வந்து அவற்றை பிடித்து பாட்டில்களில் அடைத்து சென்றுவிட்டார்” எனக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!