"எங்கள் திட்டங்களைத் திருடி விளம்பரம் தேடுகிறார் மோடி!" - அகிலேஷ் யாதவ்

அகிலேஷின் குற்றச்சாட்டிற்கு இணை சேர்க்கும் வகையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் ஒரு கருத்தைக் கூறியுள்ளார்.

தங்கள் திட்டங்களைத் திருடி, அதன் மூலம் மக்களிடம் விளம்பரம் தேடுகிறார் பிரதமர் மோடி என்று உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். 

சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தின் புர்வாஞ்சல் - டெல்லிக்கு இடையேயான 6 வழிச்சாலைத் திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டினார் பிரதமர் மோடி. இந்தத் திட்டத்திற்கு 23 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவிடப்படும் என்று சொல்லப்படுகிறது. 

பொய் விளம்பரம் தேடுகிறார் மோடி - அகிலேஷ்

இந்நிலையில், இந்தத் திட்டமானது தங்கள் ஆட்சியின் போது திட்டமிடப்பட்டதாகவும், அதற்காக தங்கள் ஆட்சியிலேயே நிலங்கள் கூட கையகப்படுத்தப்பட்டன எனவும் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். கூடுதலாக, தங்களின் திட்டத்தைத் திருடி, அதை செயல்படுத்துவதன் மூலம் மக்களிடம் பொய்யான விளம்பரத்தைத் தேடிக் கொள்கிறார் மோடி என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

அகிலேஷின் குற்றச்சாட்டிற்கு இணை சேர்க்கும் வகையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் ஒரு கருத்தைக் கூறியுள்ளார்.
"தேர்தல் நெருக்கத்தில் திட்டங்களைத் தொடங்கி மக்களின் அபிமானத்தைத் தேடும் பழைய யுக்தியை மோடி கடைபிடிக்க நினைக்கிறார். அவர் உண்மையில் இந்தத் திட்டத்தை சரியான சமயத்தில் தொடங்கி வைத்திருந்தால், இந்நேரம் அந்தத் திட்டமே முழுமையடைந்து அதை அவர் திறந்து வைத்திருக்கலாம்." என்று கூறியுள்ளார். 

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் டெல்லி - புர்வாஞ்சல் இடையிலான பயண தூரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!