`நேரம் ஒதுக்கப்பட்டது...!' -பிரதமரை சந்திக்கிறார் பினராயி விஜயன்

பிரதமர் நரேந்திர மோடியைக் கேரளா முதல்வர் பினராயி விஜயன் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா சுற்றுப்பயணம் முடித்தபிறகு டெல்லியில் பிரதமரை பினராயி விஜயன் சந்திப்பார் எனக் கூறப்படுகிறது. 

பினராயி விஜயன்

கேரளாவுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களின் அளவு குறைக்கப்பட்டது தொடர்பாக தங்களுடைய அதிருப்தியைத் தெரிவிக்க, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுவினர் டெல்லிக்குச் சென்று பிரதமரைச் சந்திக்க முயற்சி செய்தார்கள். ஆனால், முதல்வரைச் சந்திக்க அனுமதி வழங்க மறுத்துவிட்ட பிரதமர் அலுவலகம், சம்பந்தப்பட்ட துறையின் மத்திய அமைச்சரைச் சந்திக்குமாறு அறிவுறுத்தியது. ஏற்கெனவே கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்திக்க பிரதமர் மூன்று முறை மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. பிரதமரைச் சந்திக்க நான்காவது முறையும் கேரள முதல்வருக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தை, அரசியல் கட்சியினர் கடுமையாகக் கண்டித்தனர். 

இந்நிலையில், பிரதமரைச் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலவர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில்,  `பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் பினராயி விஜயன் சந்திக்க பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கியுள்ளது. முதல்வர், இரண்டு வாரக்கால சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர் வரும் ஜூலை 18-ம் தேதி நாடு திரும்புகிறார். அதன்பிறகு, அனைத்துக் கட்சிக் குழுவினருடன் கலந்து ஆலோசித்து டெல்லியில் பிரதமரைச் சந்திப்பார்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!