`விவசாயிகள் மீது நாங்களே அக்கறை வைத்துளோம்' - எதிர்க்கட்சிகளைச் சாடிய மோடி!

விவசாயிகளுக்கான நீர் பாசனத் திட்டத்தை காங்கிரஸ் ஏன் நிறைவேற்றவில்லை என்று கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி, `முதலைக் கண்னீர் வடிக்கும் எதிர்கட்சிகள்' என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

மோடி

Photo Credit- ANI

உத்தரபிரதேச மாநிலம், மிர்சாபூரில் பன்சாகர் கால்வாய் திட்டத்தை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன் பின்னர், மிர்சாபூர் மருத்துவக் கல்லூரி அமைக்க அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், `உ.பி., மாநிலத்தில் முந்தைய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் பாதியில் கைவிடப்பட்டுக் கிடப்பில் போடப்பட்டது. இதனால், மக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள். இதனை சரிசெய்ய எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த 2 நாள்களில் மக்கள் நலன்களுக்காகப் பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். முதலைக் கண்ணீர் வடிக்கும் எதிர்கட்சிகள், தன் ஆட்சியின்போது விவசாயிகளுக்காக நீர் பாசனத் திட்டத்தை ஏன் நிறைவேற்றவில்லை?. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தப் பா.ஜ.க தொடர்ந்து பலகட்ட முயற்சிகளை எடுத்து வருகிறது. பூர்வாஞ்சல் உள்ளிட்ட நாட்டின் பின்தங்கிய பகுதிகளிலும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு அதனை வெற்றிகரமாக பா.ஜ.க செயல்படுத்தியுள்ளது. புதிய இந்தியாவை உருவாக்க, குழந்தைகள், ஏழை மக்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் மீது பா.ஜ.க-வுக்கு முழு அக்கறை இருக்கிறது' என்று பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!