வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (15/07/2018)

கடைசி தொடர்பு:20:10 (15/07/2018)

30 வருடங்களில் தொழிற்சாலைகளான 14,000 சதுர கி.மீ இந்தியக் காடுகள்!

கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தியாவில் தொழிற்சாலைகளால் அழிக்கப்பட்ட காடுகளின் அளவு என்ன தெரியுமா. 14000 சதுர கிமீ. செயற்கை காடுகள் வளர்ப்பு மூலம் இதனை ஈடு செய்ய முடியாது

30 வருடங்களில் தொழிற்சாலைகளான 14,000 சதுர கி.மீ இந்தியக் காடுகள்!

இந்தியா புதிய திட்டங்களால் வளர்ச்சியடைகிறது. திட்டங்கள் வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுகின்றன என்று ஆரம்பத்தில் கூறப்படுவது வழக்கமான விஷயம். ஆனால் கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தியாவில் தொழிற்சாலைகளால் அழிக்கப்பட்ட காடுகளின் அளவு என்ன தெரியுமா. 14000 சதுர கிமீ. செயற்கை காடுகள் வளர்ப்பு மூலம் இதனை ஈடு செய்ய முடியாது என்கிறது அரசின் மக்களவை தகவல்கள்.

வனப்பகுதிகளை அழித்தலில் அதிகப்படியன விதிமுறை மீறல்கள் நடந்துள்ளதாக அரசின் தணிக்கை குழு அறிக்கை முடிவுகளே தெரிவிக்கின்றன. கடந்த 10 வருடங்களில் மட்டும் வடஇந்திய காடுகள், மத்திய இந்தியாவில் உள்ள வனப்பகுதிகள், தென்மேற்கு மலைத்தொடர்கள் முறையே 2.84%, 4.38%, 5.77% குறைந்துள்ளன. 

அரசின் 2015 வனப்பகுதிகள் அறிக்கையில் உள்ள தகவல்களின்படி 1980க்கு பிறகு மாநிலத்தில் உள்ள காடுகளில் திட்டங்களுக்காக அழிக்கப்பட்ட கணக்கில் பஞ்சாப் முன்னிலை வகிக்கிறது. கிட்டத்தட்ட பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொத்த காடுகளில் பாதி அழிக்கப்பட்டுவிட்டது. பஞ்சாப்பில் 44.55 சதவிகித காடுகள் பயன்பாட்டு நிலங்களாகியுள்ளன. ஹரியானாவில் 9.8 சதவிகித காடுகளும், குஜராத்தில் 5.93 சதவிகித காடுகளும் அழிக்கப்பட்டுள்ளன. இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் 0.25 சதவிக்கித வனப்பகுதிகள்  அழிக்கப்பட்டுள்ளன. 

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அதன் மொத்த பரப்பளவில் வனப்பகுதிகளின் சதவிகிதம் எவ்வளவு என பார்த்தால் மத்திய பிரதேசத்தில் தான் அதிக அளவிளான காடுகள் உள்ளன. மத்திய பிரதேசம் 11.04 சதவிகிம், அருணாச்சல பிரதேசம் 10 சதவிகிதம், சத்தீஸ்கர், மஹாராஷ்ட்ரா தலா 7 சதவிகிதத்துக்கும் அதிகமான வனப்பகுதிகளுடன் உள்ளன. 

காடு

கடந்த 30 ஆண்டுகளில் தொழிற்சாலைகளுக்காக கையக்கப்படுத்தப்பட்ட வனப்பகுதியின் அளவு 14000 சதுர கிமீ. இதில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை 23716. இதில் எந்த துறைக்காக எவ்வளவு வனப்பகுதிகள் அழிக்கப்பட்டன என்பதை பார்ப்போம்.

சுரங்கங்கள்: 4957 சதுர கிமீ
பாதுகாப்பு: 1549 சதுர கிமீ
நீர் மின்சாரம்: 1351 சதுர கிமீ
ஆக்கிரமிப்புகள்: 1338 சதுர கிமீ
பாசனம்: 1331 சதுர கிமீ
சாலைகள்/பாலங்கள்: 657 சதுர கிமீ
கிரமப்புற மின்சாரம்: 601 சதுர கிமீ
மின் இணைப்பு: 466 சதுர கிமீ
ரயில்வே: 99 சதுர கிமீ
குடிநீர்திட்டங்கள்: 39 சதுர கீமி
காற்றாலை: 45 சதுர கிமீ
மற்றவை : 2336 சதுர கிமீ

காடுகளை அழித்து உருவாக்கப்பட்ட டாப் 5 துறைகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் 

சுரங்கங்கள்: 1838
பாதுகாப்பு: 282
நீர் மின்சாரம்: 377
ஆக்கிரமிப்புகள்: 28
பாசனம்: 1912

தற்போது உள்ள காடுகளின் அளவு என்பது மொத்த நாட்டின் பரப்பளவில் 21.34 சதவிகிதமாகவே உள்ளது. திட்டங்களுக்காகவும், சில கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளாலும் காடுகள் அழிக்கப்பட்டு வருகிறது. வனப்பகுதிகள் அழிக்கப்படுவதால் பல இயற்கை பேரழிவுகள் ஏற்படுகின்றன. மனிதர்கள் உருவாக்கும் பேரழிவுகளும் அதிகரித்து வருகிறது. காடுகளில் வாழும் மக்களுக்கும் வனப்பகுதிகள் கையகப்படுத்துதலின் போது போதிய வாழ்வாதார நடவடிக்கைகளை அரசு எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. வளர்ச்சிக்காக காடுகள் அழிக்கப்பட வேண்டிய இடத்தில் இதற்கு மாற்று வழி உள்ளதா என்றும், வனப்பகுதிகளை அழித்து அந்த திட்டத்தை நிறைவேற்றும் அளவுக்கு அந்த திட்டம் பயனுள்ளதா என அந்த பகுதி மக்களோடு ஆலோசித்து முடித்தால் மட்டுமே இந்திய காடுகள் தப்பிக்கும். 


டிரெண்டிங் @ விகடன்