விடாது பெய்யும் கனமழை - கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை!

கேரள மாநிலத்தில் பெய்துவரும் கனத்த மழை காரணமாக 8 மாவட்டங்களில் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

கனமழை

கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனத்த மழை பெய்து வருகிறது. ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் ஓடும் காரில் மரம் முறிந்து விழுந்த சம்பவங்கள் நடந்தன. வரும் செவ்வாய்க்கிழமை வரை கனத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவுக்கும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்று கேரளத்தில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதை தொடர்ந்து திருவனந்தபுரம், கொல்லம், திருச்சூர், இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, பத்தணம்திட்டா, எர்ணாகுளம் ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்தனர். இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளை செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா மாவட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக தேர்வுகள் நடக்கும் என கூறப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!