பெண் குழந்தை பிறந்ததால் `தலாக்'! - போலீஸில் புகார் அளித்த மனைவி

பெண் குழந்தை பெற்றெடுத்ததற்காக முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்த கணவனுக்கு எதிராக போலீஸில் புகார் அளித்துள்ளார் மனைவி.

முத்தலாக்

Photo Credit - ANI

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷாம்லி. இவருக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், `கர்ப்பமுற்ற ஷாம்லிக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும்' எனக் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், அவருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால், கோபமடைந்த அவரின் கணவர் முத்தலாக் சொல்லி ஷாம்லியை விவாகரத்து செய்துள்ளார்.  இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் பெண் வீட்டார். 

கணவரின் செயல் குறித்துப் பேட்டி அளித்த ஷாம்லி, `திருமணமான நாளில் இருந்தே என்னை மிகவும் சித்ரவதை செய்துவந்தார். என் பெற்றோரிடம் சென்று பைக், பணம் வாங்கி வரும்படி தொடர்ந்து துன்புறுத்தி வந்தார். எனக்குப் பெண் குழந்தை பிறந்ததால், முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்துவிட்டார். தற்போது, என்னுடைய புகாரின் அடிப்படையில் என் கணவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!