அனந்தபுரி ரயில் இன்ஜின் திடீரென தீப்பிடித்து எரிந்தது!

கொல்லம் ரயில் நிலையத்தில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அனந்தபுரி ரயில்

கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம், நாகர்கோவில், திருநெல்வேலி வழியாக சென்னை எழும்பூருக்கு அனந்தபுரி எஸ்க்பிரஸ் ரயில் இயக்கப்பட்டுவருகிறது. திருவனந்தபுரத்திலிருந்து இயக்கப்பட்டுவந்த இந்த ரயில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று கொல்லத்திலிருந்து இயக்கப்பட்டுவருகிறது. கொல்லத்திலிருந்து தினமும் மாலை 3 மணிக்கு இந்த ரயில் இயக்கப்படுகிறது. இன்று சென்னை புறப்படுவதற்காக கொல்லம் ரயில் நிலையத்துக்கு அனந்தபுரி எஸ்க்பிரஸ் சென்றது. ரயில் நிலையத்துக்குள் ரயில் நுழைந்ததும் இன்ஜின் பகுதியிலிருந்து புகை வந்ததை அங்கிருந்தவர்கள் கண்டு அலறினர். ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால், தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது. ஷார்ட் சர்க்கியூட் காரணமாக தீப்பிடித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. வேறு இன்ஜின் கொண்டு வரப்பட்டு ரயிலை இயக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!