NEET, JEE, ICAR நுழைவுத் தேர்வுகளால் வதைபடும் மாணவர்கள்!

மிகவும் மதிப்பு வாய்ந்த படிப்புகளுக்கான நீட், ஐ.ஐ.டி, ஐ.சி.ஏ.ஆர் நுழைவுத் தேர்வுகளில் நடந்துள்ள இதுபோன்ற குளறுபடிகளால் மாணவர்கள் பெரிதும் வதைக்கப்படுகிறார்கள். மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்பட்டுள்ள மரண வேதனைகளுக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

NEET, JEE, ICAR நுழைவுத் தேர்வுகளால் வதைபடும் மாணவர்கள்!

கில இந்திய அளவிலான உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான தகுதித் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வுகளில் நடந்த குளறுபடிகளால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மனவேதனையுடன் மரண வேதனைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். தேர்வு குறித்த குளறுபடிகளால் எந்தப் படிப்பில் சேர்வது என்பதில் உறுதியான முடிவு எடுக்க முடியாமல் மாணவர்களுடன் சேர்ந்து பெற்றோர்களும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

'தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வினாத்தாள் தவறு காரணமாக கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, `புதிய தரவரிசைப் பட்டியல் தயாரிக்க' சி.பி.எஸ்.இ-க்கு ஆணையிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் புதிய உத்தரவால், தமிழில் தேர்வு எழுதிய 24,720 மாணவர்களுக்கு 196 மதிப்பெண் கூடுதலாகக் கிடைக்கும். எனவே, நீட் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களின் தரவரிசைப் பட்டியலைத் திருத்தி, அதன் அடிப்படையில் மீண்டும் மருத்துவக் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனவே, ஜூலை 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடக்க இருந்த இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில், ``ஏற்கெனவே கலந்தாய்வு மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சீட் ஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கு எந்தப் பாதிப்பும் வரக்கூடாது'' என்று சென்னை மாணவர் சத்யா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 'மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுத்த மார்க்சிஸ்ட் நாடாளுமன்று உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், இந்த வழக்கில் தன்னைக் கேட்காமல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கக் கூடாது' என்று கோரி, கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். 

நீட் நுழைவுத் தேர்வு

வேளாண்மை படிப்புகள்:

ஐ.சி.ஏ.ஆர். எனப்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ், நாடு முழுவதும் செயல்படும் வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் வேளாண் கல்வி நிறுவனங்களில், பல்வேறு வேளாண் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவற்றில், இளநிலை படிப்புகளில் 15 சதவிகிதம், முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளில் 25 சதவிகித இடங்கள், அகில இந்திய வேளாண் நுழைவுத் தேர்வுகள் மூலம் இடஒதுக்கீடு முறையில் நிரப்பப்படுகின்றன. இதற்கான நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. 

சென்னையில் ஒரு தனியார் கல்லூரி தேர்வு மையத்தில் நடந்த, ஆன்லைன் தேர்வில், மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கம்யூட்டர்களில், பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன. அதனால், மாணவர்களால் வினாக்களுக்கு முழுமையாக விடையளிக்க முடியவில்லை. இதுகுறித்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், 'அகில இந்திய வேளாண் ஒதுக்கீடுகளுக்கு மறுதேர்வு நடத்த வேண்டும்' என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஜூன் மாதம் நடந்த தேசிய வேளாண் நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வு:

``நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் - ஐ.ஐ.டி-களில் மாணவர் சேர்க்கைக்கான ஜே.இ.இ எனப்படும் கூட்டுஎஸ்.எஸ்.பாலாஜி நுழைவுத்தேர்வை நடத்திய பிறகு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, அந்தத் தேர்வில் மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களைத் திருத்தக்கூடாது. புதிய அறிவிப்பின்படி, குறிப்பிட்ட எட்டு கேள்விகளுக்கு மதிப்பெண்கள்  வழங்கக் கூடாது'' என்று சென்னையைச் சேர்ந்த மாணவி லட்சுமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கில், ``இரு இலக்க தசம எண்ணில் விடையளித்தோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதன்படி, மறுமதிப்பீடு செய்து தரவரிசைப் பட்டியலை மாற்றியமைக்க வேண்டும்'' என்று உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து கான்பூர் ஐ.ஐ.டி பதிவாளர் மேல்முறையீடு செய்தார். 1.52,000 விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய ஆறுமாத காலம் ஆகும் என்று ஐ.ஐ.டி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவுக்குத் தடைவிதித்து இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. இப்படி, உயர் கல்வி நிறுவனங்களில் நடந்துள்ள நுழைவுத் தேர்வு குளறுபடிகளால் இந்தக் கல்வியாண்டில் உயர் கல்வியில் சேரக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய சட்டப் பொறியாளர் எஸ்.எஸ்.பாலாஜி, ``குஜராத்திலும், தமிழகத்திலும் ஐ.ஐ.டி-க்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டன. ஆரம்ப நிலையிலேயே குஜராத் மாநில உயர் நீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, ஐ.ஐ.டி தனது மனுவில், 'ஐ.ஐ.டி-க்களில் உள்ள இடங்களின் அடிப்படையில்தான் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனால், யாருக்கும் இடம் இல்லை என்ற நிலை வராது. ஆனால், ரேங்க் நிலைகளில் மாற்றம் ஏற்படலாம்'' என்ற வாதத்தை முன்வைத்தது. இதையடுத்து இந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது. ஐ.ஐ.டி. வாதத்தின் அடிப்படையில், ரேங்க் நிலையில் மாற்றம் ஏற்படும்போது சென்னையில் இடம் கிடைக்க வேண்டிய மாணவனுக்கு டெல்லியில் இடம் கிடைத்தால் சம்பந்தப்பட்ட மாணவன், கல்வி மையத்தைத் தேர்வு செய்யும் உரிமை மீறப்படுகிறது அல்லவா? இதுபோலவே, ரேங்க் பிரச்னையால் பல மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். நீட் தேர்விலும் ஏற்கெனவே சொன்னதுபோல குளறுபடிகள் நடந்திருப்பது இப்போது நிருபிக்கப்பட்டுள்ளது. வேளாண் படிப்புக்கான தகுதித் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலால் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த நிறுவனங்கள் என்று பறைசாற்றப்பட்ட நிறுவனங்களின் நிர்வாகத் திறமையின்மை வெளிப்பட்டிருக்கிறது. மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்பு உணர்வே இதுபோன்ற பிரச்னைகளை வெளியுலகுக்குக் கொண்டுவந்துள்ளது. இத்தனை மனவேதனையிலும் துணிச்சலாக இந்தப் பிரச்னைகளை முன்னெடுத்த மாணவர்களுக்கு வாழ்த்துகள். இனியாவது தேர்வுகள் நடத்தும் உயர் அமைப்புகள் உரிய கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும்'' என்றார்.

டெல்லி உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் முன்னிலையில் விசாரணையில் இருக்கும் நீட் தேர்வு குறித்த வழக்கைப் போட்டகாஞ்சிபுரம் இளங்கோ காஞ்சிபுரம் இளங்கோ, தமிழ் வழியில் நீட் தேர்வு எழுதிய 24,720 மாணவர்களுக்குக் கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைப் பாராட்டுகிறோம். இதனால் 180 முதல் 250 மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும். அதுவும், இந்த உத்தரவால் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும், பணம் இருந்தும் பாஸ் மார்க் இல்லாததால் நிர்வாக ஒதுக்கீடுகளில் இடம்பெற முடியாத மாணவர்களுக்கு இந்த உத்தரவு வரப்பிரசாதம் ஆகும். கடந்த ஆண்டு அன்னை மருத்துவக் கல்லுரி அனுமதி ரத்தானதால், அங்குள்ள இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 144 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டது. 

எனவே, மத்திய அரசின் அனுமதியை எதிர்பார்க்காமல் தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உரிய வாய்ப்பைத் தரவேண்டும். அன்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களை முன்னுதாரணமாக வைத்து, மருத்துவக் கலந்தாய்வை தமிழக அரசு உடனே நடத்த வேண்டும். மிகவும் மதிப்பு வாய்ந்த படிப்புகளுக்கான நீட், ஐ.ஐ.டி, ஐ.சி.ஏ.ஆர் நுழைவுத் தேர்வுகளில் நடந்துள்ள இதுபோன்ற குளறுபடிகளால் மாணவர்கள் பெரிதும் வதைக்கப்படுகிறார்கள். மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஏற்பட்டுள்ள மரண வேதனைகளுக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'' என்றார் வேதனையுடன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!