வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (17/07/2018)

கடைசி தொடர்பு:11:13 (17/07/2018)

இந்து பாகிஸ்தான் பேச்சு - சசிதரூர் அலுவலகத்தில் கரி பூசிய பா.ஜ.க இளைஞரணியினர்

'இந்தியா, இந்து பாகிஸ்தான் ஆகிவிடும்' என்ற சசிதரூரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து அவரது ஆபீஸில் பா.ஜ.க இளைஞரணியினர் கரி பூசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'இந்தியா இந்து பாகிஸ்தான் ஆகிவிடும்' என்ற சசிதரூரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து, அவரது அலுவலகத்தில் பா.ஜ.க இளைஞரணியினர் கரி பூசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சசிதரூர்

பா.ஜ.க ஆட்சியில் ஜனநாயக அரசியலமைப்பு சிதைந்துவருகிறது. பா.ஜ.க மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், பாராளுமன்ற மேலவையிலும் அவர்களுக்கு முழு மெஜாரிட்டி இருந்தால், புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிவிடும். இந்தியா, இந்து பாகிஸ்தானாக மாறிவிடும். நாட்டில் முஸ்லிம்களைவிட பசுக்களுக்குதான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சசிதரூர் பேசியதற்கு, பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில், சசிதரூரைக் கண்டித்து திருவனந்தபுரத்தில் பா.ஜ.க இளைஞரணி சார்பில் கண்டனப் போராட்டம் இன்று நடந்தது. போராட்டத்தை அடுத்து, சசிதரூர் அலுவலகத்தில் பா.ஜ.க இளைஞரணியினர் கரி ஆயில் ஊற்றி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். மேலும், சசிதரூர் தனது கருத்தைத் திரும்பப் பெறுவதுடன், இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பா.ஜ.க-வினர் வலியுறுத்தினர்.