``ஆண்டுதோறும் 200 ராணுவ வீரர்கள் ஊனமடைகின்றனர்!'' - அதிர்ச்சித் தகவல்!

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 200 ராணுவ வீரர்கள் காயங்களால் உடல் ஊனம் அடைகின்றனர் என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ராணுவ வீரர்கள்

பிற நாடுகளின் தாக்குதலிலிருந்து தன் நாட்டைப் பாதுகாக்க ஒவ்வொரு நாடும் ராணுவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. அந்த வகையில், நமது நாடும் ராணுவத்துக்கு அதிக நிதியை ஒதுக்கி, மற்ற நாடுகளுக்கு மத்தியில் படை வலிமையைப் பெருக்கி வருகிறது. நம் ராணுவத்தில், சுமார் 10 லட்சத்துக்கும் கூடுதலான வீரர்கள் உள்ளனர்.  குறிப்பாக, ராணுவத்தில் பணியாற்றும் நம் வீரர்கள், ஜம்மு - காஷ்மீர், வட கிழக்கு இந்தியா ஆகிய பகுதிகளில் தீவிரவாத ஒழிப்பு மற்றும் ஊடுருவல் ஒழிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஒவ்வோர் ஆண்டும் 200 ராணுவ வீரர்கள் காயங்களால் உடல் ஊனம் அடைகின்றனர் என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.                      

இதுகுறித்து இந்திய ராணுவத்தின் மருத்துவச் சேவை இயக்குநர் ஜெனரலான பிபின் பூரி கூறுகையில், ``சேதத்தைக் கட்டுப்படுத்தும் அறுவைசிகிச்சை வழியே உயிரைக் காக்க வேண்டும் என்பதே முதன்மையான குறிக்கோள். ஒவ்வோர் ஆண்டும் 200 ராணுவ வீரர்கள் தீவிர ஊனத்தினால் பாதிப்படைகின்றனர். இது, மிகப்பெரிய எண்ணிக்கையாகும். ஒருவகையில், போர்க் காயங்கள் என்று இதற்குக் காரணம் சொன்னாலும்,  மலைப்பகுதிகளில் ஏற்படும் விபத்துகள் மற்றும் பனிச்சரிவு ஆகியவற்றால் ஏற்படும் காயங்களே அதிகம். இது, கடந்த 10 வருடங்களில் கிடைத்த தகவல்கள்மூலம் தெரியவந்துள்ளது. மேலும், வயிறு மற்றும் நெஞ்சு ஆகியவற்றுக்கு ஏற்படும் காயங்களால், குடல் மற்றும் நுரையீரல்கள் பாதிக்கப்படுவதும் பலமுறை நடந்துள்ளது'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!