காவிரி நடுவர் மன்றம் கலைப்பு - அரசாணை வெளியீடு!

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதையடுத்து, காவிரி நடுவர் மன்றம் கலைக்கப்படுவதாகத் தெரிவித்து, மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்றம்


காவிரிப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், கடந்த 1990-ம் ஆண்டு அமைக்கப்பட்டது காவிரி நடுவர் மன்றம். கடந்த 28 ஆண்டுகளாக காவிரி நடுவர் மன்றம் இயங்கிவருகிறது. மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் பிரச்னை, நீர் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களுக்குத் தீர்வு காணும் வகையில், காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2007-ம் ஆண்டு, காவிரி விவகாரம் தொடர்பாக இறுதித் தீர்ப்பை வழங்கியது நடுவர் நீதிமன்றம். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்தும்படி உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் தீர்ப்பு வழங்கியது.  

அரசாணை

 

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதால், காவிரி நடுவர் மன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சார்பில் அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில், காவிரி நடுவர் நீதிமன்றம் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!