`ஓபன் - ஏர் ஜெயில் கஃபே’ - 3.5 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் சிறைத்துறை!

இமாசலப்பிரதேச சிறைத்துறை மொபைல் கேன்டீன், புக் கஃபே மூலம் ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது.

ஜெயில் கஃபே

Photo Credit: ANI

இமாசலப்பிரதேசத்தில் செயல்படும் ஓபன் -ஏர் ஜெயில் கஃபே  சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளைக் கொண்டு இந்த கஃபே நடத்தப்படுகிறது. அம்மாநிலத்தின் முக்கிய நகரமான சிம்லா, தர்மசாலா, நாகான் ஆகிய பகுதிகளில் சுமார் 135 சிறைக் கைதிகளைக் கொண்டு நடத்தப்படுகிறது. இந்த மொபைல் கேன்டீன், புக் கஃபே ஆகியவை சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் வாசிகளையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய காவல்துறை உயர் அதிகாரிகள், “மொபைல் கேன்டீன், சிறையில் கைதிகள் தயாரிக்கும் உணவு வகைகள், கைவினைப்பொருள்கள் ஆகியவை அவர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை உருவாக்கும். சிறைக்கைதிகளுக்கு மறு வாழ்வு அளிக்கும் நோக்கிலே இது ஆரம்பிக்கப்பட்டது. இதற்காக நன்னடத்தை அடிப்படையில் சுமார் 135 கைதிகள் தேர்வு செய்து அவர்களின் மூலம் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சிறைவாசிகளுக்கு வேலைவாய்ப்பாகவும், அவர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சியாகவும் இது அமையும். இதன்மூலம் சிறைத்துறை வருடத்துக்கு சுமார் 3.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!