பெங்களூருவில் பாலியல் புகாரில் சிக்கிய ஐ.பி.எஸ். அதிகாரி

பெங்களூருவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி போலீஸ் சீருடையில் பெண்ணுக்கு முத்தமிடும் காட்சி இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு

பெங்களூரு ரூரல எஸ்.பியாக பணிபுரிந்தவர் டாக்டர். பீமாசங்கர். இவர் போலீஸ் சீருடை அணிந்தபடி ஒரு பெண்ணுக்கு முத்தமிடும் வீடியோ காட்சிகள் கர்நாடகா மாநிலத்தில் சில மீடியாக்களில் வெளியாகின. அதையடுத்து, பீமாசங்கர் உடனடியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு வேறு ஏதும் பொறுப்பு வழங்கப்படவில்லை. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதுபற்றி பெங்களூரு போலீஸ் வட்டாரத்தில் பேசியபோது, " அந்த வீடியோவை வெளியிட்டது வீடியோவில் இடம்பெற்றுள்ள பெண்ணின் கணவன். சாப்ட்வேர் துறையில் பணிபுகிறவர். இவருக்கும் பீமாசங்கருக்கும் ஏற்பட்ட பழக்கத்தை ஆரம்பத்தில் கண்டித்திருக்கிறார். ஆனால், பீமாசங்கர் கேட்கவில்லை. கோபமான அவர் எப்படியோ இந்த வீடியோவை மீடியாக்களுக்கு கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில், பீமாசங்கர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, விசாரணை நடந்துவருகிறது " என்றார்கள். இதன் அடுத்தகட்ட விவரங்கள் விரைவில் வெளிவருமென தெரிகிறது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!