கேரளாவில் சசி தரூருக்கு எதிர்ப்பு... பா.ஜ.க.வினர் கறுப்புக் கொடி காட்டி கோஷம்!

சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட சசி தரூருக்கு எதிராகக் களமிறங்கிய பி.ஜே.பி-யினர் பற்றிய கட்டுரை...

ர்ச்சைக்குரிய கருத்தைப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூருக்கு எதிராகக் கேரளாவில் பி.ஜே.பி. தொண்டர்கள் கறுப்புக் கொடி காட்டி கோஷம் எழுப்பினர்.

சசி தரூர்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சசி தரூர்,``2019-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. மீண்டும் வெற்றிபெற்றால் இந்திய நாடு, `இந்து - பாகிஸ்தானாக மாறிவிடும்'. மகாத்மா காந்தி, நேரு, சர்தார் படேல், ஆசாத் போன்ற இந்திய விடுதலை போராட்ட வீரர்கள் எதற்காகப் போராடினார்களோ.... அது, இல்லாமல் போய்விடும். 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பி.ஜே.பி. வெற்றிபெற்றால் நமது நாட்டின் ஜனநாயகம் சிதைந்து போய்விடும்; புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டியிருக்கும்; இந்து ராஷ்டிரா கொள்கைகள் புதிதாக உருவாக்கப்பட்டு, சிறுபான்மையினருக்கான சமத்துவம் மறுக்கப்படும்'' என்று பேசியிருந்தார். இது, நாட்டு முழுவதும்  சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ், ``சசி தரூரின் பேச்சுக்கும், எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை'' என்றது. இதற்கிடையில், திருவனந்தபுரத்தில் உள்ள சசி தரூரின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. இதுகுறித்து, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்தைப் பதிவுசெய்த சசி தரூர், பி.ஜே.பி-யினர் மீது குற்றம்சாட்டியிருந்தார். 

இந்த நிலையில், நேற்று (17-ம் தேதி) கேரளாவின் பச்சலூர் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காகச் சென்ற சசி தரூருக்கு எதிராகப் பி.ஜே.பி. தொண்டர்கள் கறுப்புக் கொடி காட்டி கோஷம் எழுப்பினர். எனினும், போராட்டக்காரர்கள் சசி தரூரை நெருங்கவிடாமல் போலீஸார் பாதுகாப்பு முறைகளைக் கையாண்டனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!