சத்ரபதி சிவாஜி சிலையின் உயரம் குறைப்பு - ஆர்.டி.ஐ தகவல்!

ராட்டிய அரசின் சார்பில் அமைக்கப்படவிருக்கும் சத்ரபதி சிவாஜி சிலையின் உயரம் குறைக்கப்பட இருப்பதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் தெரியவந்திருக்கிறது.

சத்ரபதி சிவாஜி சிலை

மும்பை மெரின் டிரைவ் கடற்கரையில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளே அரபிக்கடலில், மராட்டிய அரசு சார்பில், மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜிக்கு பிரமாண்டமான  நினைவிடம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, சத்ரபதி சிவாஜி நினைவிடம் அமைப்பதற்காகக் கடந்த மார்ச் மாதம் தனியார் நிறுவனம் ஒன்றுடன் 2,500 கோடி ரூபாய் அளவுக்கு திட்ட ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த நிலையில், திட்ட விலைச் சுமையைக் குறைக்க சத்ரபதி சிவாஜி சிலையின் உயரம் குறைக்கப்படுகிறது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் கேட்கப்பட்ட கேள்வியில் தெரியவந்திருக்கிறது. சிவாஜி சிலையின் உயரம், திட்டத்தின்படி 83.2 மீட்டர் என இருந்தது. அதில் 7.5 மீட்டர் குறைக்கப்பட்டு, 75.7 அடியாக சிலை உருவாகிறது. அத்துடன், அவர் கையில் உள்ள வாளின் உயரம் திட்டத்தைவிட அதிக உயரம் கொண்டிருக்கும். அதன் உயரம் 38 மீட்டரில் இருந்து 45.5 மீட்டராக நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், இதனால் சிலையின் மொத்த உயரம் 121.2 மீட்டர் என்பதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதேபோன்று, பீடத்தின் உயரம் 96.2 மீட்டரில் இருந்து 87.4 மீட்டராகக் குறைக்கப்பட்டிருக்கிறது.  பீட உயரத்தில் செய்துள்ள மாற்றத்தினால், 338.94 கோடி ரூபாய் மிச்சப்படும் எனத் தகவல் சொல்லப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!