வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (18/07/2018)

கடைசி தொடர்பு:10:00 (18/07/2018)

கனமழையால் மோடியின் குஜராத் பயணம் ஒத்திவைப்பு!

குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், அந்த மாநிலத்தில் மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி ஒத்திவைத்துள்ளார்.

கன மழை

நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுக்கூட்டங்களில் பேசிவருகிறார்.  குஜராத் மாநிலத்தில், வரும் 20-ம் தேதி சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தார். அப்போது வல்சாத், ஜூனாகத், காந்தி நகர் ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவர் பார்வையிடவும் முடிவுசெய்திருந்தார். இந்த நிலையில், குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையினால், வல்சாத், ஜூனாகத் ஆகிய பகுதிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதைக் கருத்தில் கொண்டு குஜராத் மாநிலத்தில் மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணத்தைப் பிரதமர் நரேந்திர மோடி ஒத்திவைத்துவிட்டார்.  இந்தத் தகவலை குஜராத் முதல்வரும், பி.ஜே.பி. மூத்த தலைவருமான விஜய் ரூபானி,  அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க