ஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் நோட்டு - அடுத்த மாதம் வெளியாகிறது!

விரைவில் ஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்த உள்ளது ரிசர்வ் வங்கி. இதற்கான அச்சுப்பணிகள் தொடங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

ரிசர்வ் வங்கி

2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பழைய 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் தாள்கள் பணம் மதிப்பிழக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்பு புதிய 2000 ரூபாய், 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், புதிய வடிவில் 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது, ஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் வடிவமைக்கப்பட்டு, மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில் அச்சடிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த புதிய 100 ரூபாய் தாள் பழைய 100 ரூபாய் தாளைவிட சிறியதாகவும், புதியதாக வெளியிடப்பட்ட 10 ரூபாய் தாளை விட சற்று பெரியதாகவும் இருக்கும். இதில் குஜராத்தில் 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலகப் புகழ் பெற்ற ராணி படிக்கல் கிணற்றின் படம் இடம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. புற ஊதாகதிர் வெளிச்சத்தில் மட்டுமே பார்க்க வகையில் புதிய 100 ரூபாய் தாளில் பல சிறப்பம்சங்களைச் சேர்த்துள்ளனர்.

புதிய 100 ரூபாய் தாள் வெளியானாலும் பழைய 100 ரூபாய் தாள்கள் பயன்பாட்டில் இருக்கும் எனவும், ஏ.டி.எமில் பழைய 100 ரூபாய்க்கு மாற்றாக புதிய 100 ரூபாய் தாள்கள் வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!